சந்திராயன்

பெய்ஜிங்: ஆசியாவின் இரண்டு ஆகப் பெரிய நாடுகளான சீனா-இந்தியாவுக்கு இடையிலான பகை நிலவுவரை போய் இருப்பதாகத் தெரிகிறது.
பெங்களூரு: நிலவில் சூரிய சக்தி இல்லாமல் உறக்கத்தில் இருக்கும் ‘ரோவர்’ ஊர்தி மீண்டும் உயிர்த்தெழ வாய்ப்புள்ளது. ஆனால் எப்போது என கணிக்க முடியாது என்று இஸ்ரோ எனும் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார்.
பெங்களூரு: ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து பிஎஸ்எல்விசி-57 உந்துகணை மூலம் சூரியனை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்ட ஆதித்யா-எல்1 என்ற விண்கலம், அறிவியல் தரவுகளை சேகரிக்கத் தொடங்கியுள்ளது என்று இந்திய விண்வெளி ஆய்வு அமைப்பான இஸ்ரோ தெரிவித்துள்ளது.
புதுடெல்லி: மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் முதல்கட்டப் பரிசோதனைத் திட்டத்தை இஸ்ரோ அக்டோபர் மாதம் தொடங்குகிறது.
ஸ்ரீஹரிகோட்டா: நிலவில் ஒய்யாரமாக நடைபோட்டு வரும் பிரக்யான் எனும் ரோவர் ஊர்தி கலம் அடுத்த 14 நாட்களுக்கு உறக்கத்தில் இருக்கும் என்று இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ தெரிவித்துள்ளது.