அமலாக்கத்துறை

ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநில கிராமப்புற வளர்ச்சித்துறை அமைச்சரின் உதவியாளர் வீட்டில் அமலாக்கத்துறை நடத்திய சோதனையில் 20 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

அம்மாநில கிராமப்புற வளர்ச்சித்துறை அமைச்சராக ஆலம்கிர் ஆலம் பதவி வகிக்கிறார். கிராமப்புற வளர்ச்சித்துறை சார்பில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களில் பணமோசடி நடந்ததாக புகார் எழுந்ததுள்ளது. இது தொடர்பாக அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது.
சென்னை: சட்ட விரோத மணல் கொள்ளை விவகாரம் தொடர்பாக சென்னையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் வேலூர், அரியலூர், கரூர், திருச்சி, தஞ்சாவூர் ஆகிய 5 மாவட்ட ஆட்சியர்கள் வியாழக்கிழமை (ஏப்ரல் 25) நேரில் முன்னிலையாகினர்.
புதுடெல்லி: டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் சர்க்கரை அளவை உயர்த்த சிறையில் இனிப்பு உணவுகளை அதிகம் எடுத்துகொள்கிறார் என்ற அமலாக்கத்துறையின் குற்றச்சாட்டுக்கு கெஜ்ரிவால் தரப்பு மறுப்பு தெரிவித்துள்ளது.
ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் நிலமோசடி, நிலக்கரி சுரங்க முறைகேடு, சட்டவிரோதப் பணப்பரிமாற்றம் போன்ற முறைகேடுகளில் ஈடுபட்டதாக ஜனவரி 31ஆம் தேதி அமலாக்கத்துறை அதிகாரிகள் அவரைக் கைது செய்தனர்.
புதுடெல்லி: டெல்லி மதுபானக் கொள்கையுடன் தொடர்புடைய பணமோசடி வழக்கில், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை அதிகாரிகள் வியாழக்கிழமை இரவு கைது செய்தனர்.