பங்குதாரர்

சிங்டெல் நிறுவனம், பாரதி ஏர்டெல் நிறுவனத்தில் உள்ள தனது பங்குகளில் 49 மில்லியனை அமெரிக்காவைச் சேர்ந்த முதலீட்டு நிறுவனமான ஜிகியூஜி பார்ட்னர்சிடம் விற்றுவிட்டதாக மார்ச் 7ஆம் தேதி தெரிவித்தது.
சிங்கப்பூர் அறநிறுவனங்களின் மூலம் பயங்கரவாதத்துக்கு ஆதரவாக வெளிநாடுகளிலிருந்து நாட்டுக்குள் நிதி வந்ததற்கான அறிகுறி இல்லை என்று அறநிறுவன ஆணையாளர் (சிஓசி) தெரிவித்துள்ளார்.
ஹெல்த்வே மெடிக்கல் குழுமத்தைக் கையகப்படுத்தி, அதனைப் பங்குச் சந்தைப் பட்டியலிலிருந்து நீக்குவதற்கான இறுதி நாள் அக்டோபர் 26ஆம் தேதி மாலை 5.30 மணிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
பங்குச்சந்தை வர்த்தகத்தில் தவறாக வழிநடத்திய குற்றங்கள் தொடர்பில் ‘நியூ சில்க்ரூட்ஸ்’ குழுமத்தின் முன்னாள் தலைமை நிர்வாகி கோ ஜின் ஹியன் மீதும் ஆடவர்கள் மூவர் மீதும் புதன்கிழமை அரசு நீதிமன்றத்தில் மொத்தம் 132 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
சிங்கப்பூர் பங்குச் சந்தை (எஸ்ஜிஎக்ஸ்), ஜூன் 30ஆம் தேதியுடன் முடிவடைந்த இந்த ஆண்டின் இரண்டாவது காலாண்டில் $286.3 மில்லியன் நிகர லாபம் ஈட்டியது.