You are here

வாழ்வும் வளமும்

தனிமை உணர்வளிக்கும் சமூக ஊடகங்கள்

அதிகப்படியான சமூக ஊடகப் பயன்பாடு தனிமை உணர்வை யும் மன அழுத்தத்தையும் அதிகரிப்பதாக ஆய்வு முடிவு ஒன்று தெரிவிக்கிறது. ‘ஃபேஸ்புக்’, ‘ஸ்னேப்சாட்’, ‘இன்ஸ்டகிராம்’ போன்ற சமூக ஊடகங்களை அதிகம் பயன் படுத்துவது நலவாழ்வைப் பாதிக்கக்கூடும் என்றும் அது குறிப்பிடுகிறது. இத்தகைய சமூக ஊடகங் களில் அதிக நேரத்தைச் செலவிடுவதால், செய்து முடிக்க வேண்டிய பணிகள் கிடப்பில் இருப்பதும் அவற்றைச் செய்து முடிக்க வேண்டிய கட்டாயத்தில் மன அழுத்தம் ஏற்படுவதும் தெரியவந்துள்ளது.

மார்பகப் புற்றுநோயை விரட்டும் மஞ்சள், மிளகு

மார்பகப் புற்றுநோய் நமது சமூகத்திடையே முக்கியமான சுகாதாரப் பிரச்சினையாக நிலவி வருகிறது. கடந்த 20 ஆண்டுகளில் சிங்கப்பூரில் மார்பகப் புற்றுநோய் ஏற்படுவது இரட்டிப்பாகியுள்ள தாகத் தகவல்கள் தெரிவிக் கின்றன. சிங்கப்பூரில் இந்தியப் பெண்களிடையே 2011 முதல் 2015 வரையிலான காலகட்டத்தில் மொத்தம் 615 பேருக்கு இந்நோய் ஏற்பட்டிருப்பது பதிவுசெய்யப்பட்டு உள்ளது. இந்தியாவில் இருக்கும் பெண் களைவிட சிங்கப்பூர், அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற வளர்ச்சி அடைந்த நாடுகளில் வசிக்கும் இந்திய இனத்தவரிடையே மார்பகப் புற்றுநோய் அதிகம் காணப்படுகிறது.

‘தேடலில்’ தொடங்கி காதலில் இணைந்த ஜோடி

‘வசந்தம்’ உள்ளூர் தமிழ் தொலைக்காட்சி ஒளிவழியில் அண்மையில் முடிவடைந்த 'கலாபக் காதலா' எனும் உறவுகளை மையமாகக் கொண்ட நாடகத் தொடரில் முக்கிய வேடத்தில் நடித்தவர் த.சூரியவேலன். இவரின் நிஜமான காதல் கதையோ 2016 ஆம் ஆண்டின் 'தேடல்' எனும் வசந்தம் ஒளிவழியின் வருங்கால நடிகர் களை அடையாளம் காணும் நடிப்புத் திறன் போட்டியில் தொடங்கியது. அங்குதான் அவர் சக நாடகக் கலைஞரான அ.ரூபினியை முதன் முதலாகச் சந்தித்தார்.

ஹவ்காங் வாசிகளுக்கு தீபாவளி அன்பளிப்பு

'சன்லவ்' முதியோர் நடவடிக்கை நிலையத்துடன் ஹவ்காங் சமூக மன்றத்தின் இந்தியர் நற்பணி செயற்குழுவும் துடிப்புமிக்க மூப் படைதல் குழுவும் இணைந்து வசதிகுறைந்த ஹவ்காங் குடியி ருப்பாளர்களுக்கு தீபாவளி அன்பளிப்புப் பைகளை வழங் கின. முறுக்குகள், பலகாரங்கள், மளிகைப் பொருட்கள் கொண் டுள்ள அன்பளிப்புப் பைகள் தீபாவளியை முன்னிட்டு, ஹவ்காங் வட்டாரத்திலுள்ள 50 வசதி குறைந்த குடும்பங்களுக்கு கொடுக்கப்பட்டன.

மல்லித்தூள் தடவிய குறும்பாட்டு வறுவல்

மல்லித்தூள் தடவிய குறும்பாட்டு வறுவல் வறுவலுக்குத் தேவையானவை:

குறும்பாட்டு இறைச்சி - 3

துண்டுகள் (Racks)

இஞ்சி, பூண்டு விழுது - 20 கி.

உப்பு - தேவையான அளவு

கரம் மசாலா - 5 கி.

கடுகு எண்ணெய் - 10 கி

எலுமிச்சைச் சாறு - சிறிதளவு

சாஸ் செய்ய தேவையானவை:

எண்ணெய் - 60 கிராம் (கி)

கிராம்பு - 3, ஏலக்காய் - 4

நறுக்கிய வெங்காயம் - 350 கி.

பூண்டு விழுது - 10 கி.

இஞ்சி விழுது - 10 கி.

சிவப்பு மிளகாய்ப்பொடி - 10 கி.

மல்லித்தூள் - 7 கி.

சீரகம் - 5 கி.

கல்வி உதவி நிதிக்கு விண்ணப்பிக்கலாம்

தமிழர் பேரவையின் கல்வி உதவி நிதியைப் பெற மாணவர்கள் இப் போது விண்ணப்பிக்கலாம். கடந்த 2000ஆம் ஆண்டு முதல் தமிழர் பேரவை உதவி தேவைப்படும் இந்திய மாணவர் களுக்கு கல்வி உபகார நிதி வழங்கி வருகிறது. $150 முதல் $300 வரை வழங்கப்படும் இந்த உதவி நிதியை இதுவரை சுமார் 3,000 மாணவர்கள் பெற்று பயனடைந்து உள்ளனர். இதன் மூலம் மொத்தம் $200,000 நிதி இதுவரை வழங்கப்பட்டுள்ளது.

‘சீமராஜா’ ஜிப்பா, ‘தேவசேனா’ ஆடை

வைதேகி ஆறுமுகம்

தீபாவளி வந்தால் லிட்டில் இந்தியா வட்டாரமே களைகட்டி விடும். தெருவெங்கும் ஒளியூட்டும் வண்ண விளக்கு அலங்காரத்துடன் கடைகள் எங்கும் நிரம்பி வழியும் புது வரவுகளுடன் தீபாவளிக்கென சிறப்பாக அமைக்கப்படும் சந்தை களும் ஒரு மாத காலத்திற்கு கொண்டாட்ட உணர்வை ஊட்டும். கேம்பல் லேன் தீபாவளி சந்தை யில் பண்டிகைக்குத் தேவையான ஆடைகள், ஆபரணங்கள், அலங் காரப் பொருட்கள், பலகாரங்கள் என எல்லாப் பொருட்களும் கிடைக்கின்றன.

பிக்சல்3 திறன்பேசிகள் நவம்பரில் அறிமுகம்

கூகல் நிறுவனம் தனது புதிய பிக்சல் 3, பிக்சல் 3XL ஆகிய இரண்டு திறன்பேசிகளை நவம்பர் 1ஆம் தேதி அறிமுகப்படுத்த வுள்ளது. இதனை அந்நிறுவனம் நேற்று அமெரிக்காவில் ஆண்டுதோறும் நடைபெறும் தனது நிகழ்ச்சி ஒன்றில் அறிவித்தது. இந்தத் திறன்பேசிகள் சிங் கப்பூர் உள்ளிட்ட 13 நாடுகளில் வரும் நவம்பர் 1ஆம் தேதி முதல் விற்பனைக்கு வருகிறது. இவற்றின் விலைகள்: பிக்சல் 3XL (6.3”) - 64 ஜிபி S$1,399, 3XL(6.3”) (128 ஜிபி) S$1.549. பிக்சல் 3 (5.5”) = 64 ஜிபி S$1,249, பிக்சல் 3 (5.5”) = 128 ஜிபி S$1,399. மூன்று வண்ணங்களில் கிடைக் கும் இந்தத் திறன்பேசி களை வாங்க சிங்கப்பூர் கூகல் ஸ்டோரில் முன்பதிவு செய்யலாம்.

Pages