You are here

வாழ்வும் வளமும்

நாட்டிய நாடகமாக அகதிகளின் வாழ்க்கை

இயற்கைப் பேரிடர்கள், போர், அர சியல் கலவரம்/பிரச்சினைகள் கார ணமாக சொந்த நாட்டிலிருந்து பிற நாடுகளில் தஞ்சம் நாடுபவர்களே அகதிகள். ஆனால் சமுதாயத்தில் பலரோ அகதிகளின் வாழ்க்கையைப் பற்றி தவறாகப் புரிந்துகொண்டிருக் கிறார்கள். அவர்கள் நாடோடிகள் அல்லது பிற நாடுகளுக்குப் பிழைப்பு தேடி செல்பவர்கள் என்று தவறாக எண்ணுகிறார்கள். அகதிகளின் வாழ்க்கையைப் பற்றி சிங்கப்பூரில் மீண்டும் ஒரு நாட்டிய நாடகத்தை அப்சரஸ் ஆர்ட்ஸ் மேடையேற்றுகிறது. ‘அகதி’ நாட்டிய நாடகம் இன்றும் நாளையும் எண் 6, பாம் ரோடு எனும் முகவரியில் உள்ள சிக்லாப் சவுத் சமூக மன்ற உள்ளரங்கில் இரவு 7.00 மணிக்கு நடைபெறும்.

மூன்று அமைப்புகளுக்கு வளர்தமிழ் இயக்கத்தின் திறன் மேம்பாட்டு நிதி ஆதரவு

தமிழ் மொழி பயன்பாட்டிலும் மேம் பாட்டிலிலும் இலக்கியம், கலை வழியாகத் தொடர்ந்து செயல்பட அவாண்ட் தியேட்டர், சிங்போரிமா, ஓம்கார் ஆர்ட்ஸ் ஆகிய மூன்று அமைப்புகள் வளர்தமிழ் இயக்கத்தின் திறன் மேம்பாட்டு நிதி ஆதரவைப் பெற்றுள்ளன. ஏப்ரல் மாதத்தில் நடைபெறும் தமிழ் மொழி விழாவில் மட்டுமின்றி ஆண்டு முழுவதும் தொடர்ந்து நிகழ்ச்சிகள் படைக்கவும் திறனா ளர்களை உருவாக்கவும் 2017ல் இந்தத் திறன் மேம்பாட்டு நிதி ஆதரவுத் திட்டத்தை வளர்தமிழ் இயக்கம் தொடங்கியது.

38வது திருமுறை மாநாடு இன்று துவக்கம்

சிங்கப்பூரில் ஆண்டுக்கு ஒரு முறை நடைபெறும் திருமுறை மாநாடு இன்று முதல் ஞாயிற்றுக் கிழமை வரை தேங் ரோடு அருள்மிகு தெண்டாயுதபாணி கோயில் திருமண மண்டபத்தில் மாலை 6.00 மணி முதல் இரவு 9.30 மணி வரை நடைபெறுகிறது. சிறப்புப் பேச்சாளரான தமிழ் நாட்டைச் சேர்ந்த பனசை மூர்த்தி இன்று அம்பலவாணர் சிறப்புச் சொற்பொழிவாக ‘குரு லிங்க சங்கம வழிபாடு’ என்ற தலைப் பிலும் மற்ற இரு நாட்களில் முறையே ‘மூர்த்தி, தலம், தீர்த்தம்’, ‘அவ்வுருவில் தோன்றி அருள் செய்வான்’ என்ற தலைப்புகளிலும் பேச உள்ளார்.

முன்னோடி எழுத்தாளர்களுக்கு பாராட்டு

எஸ். வெங்கடேஷ்வரன்

உள்ளூர் இலக்கியங்களை ஆவணப்படுத்தும் முயற்சிகளில் ஒரு முக்கிய நிகழ்வாக நேற்று முன்தினம் சிங்கப்பூரின் மூத்த தமிழ் எழுத்தாளர்களான திரு வாளர்கள் பி.கிருஷ்ணன், இராம.கண்ணபிரான், மா. இளங் கண்ணன் ஆகியோரின் ஆவணப் படங்கள் வெளியிடப்பட்டன. வாசகர் வட்டம் நடத்திய இந்த வெளியீட்டு நிகழ்ச்சி தேசிய நூலகத்தில் மாலை ஐந்து மணிக்கு நடைபெற்றது.

வாசகர் வட்டம் தயாரித்த ஆவணப்படங்களின் வெளியீட்டு விழாவில் (இடமிருந்து) திருவாளர்கள் மா.இளங்கண்ணன், இராம.கண்ணபிரான், பி.கிருஷ்ணன், தொடர்பு தகவல் அமைச்சர் எஸ்.ஈஸ்வரன். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

மூத்தோருக்கான இல்லப் பராமரிப்புச் சேவைகள்

சிங்கப்பூரில் மூப்படைவோர் எண்ணிக்கை அதி கரித்து வருகிறது. எனவே முதியோர் பராமரிப்பில் அரசாங்கம் பல வழிகளிலும் கவனம் செலுத்தி வருகிறது. மூத்தோர்களைப் பராமரிக்க பல சேவைத் திட்டங்கள் நடப்பில் உள்ளன. அவற்றில் சில: வீட்டுக்கு அருகே உதவி நிலையம்: சில வாடகை வீடுகளில் வசிக்கும் முதியோர்களுக்கு, அவர்களின் வசிப்பிடங்களுக்கு அருகேயுள்ள மூத்தோருக்கான செயல்பாட்டு நிலையங்கள் உதவி வழங்கி வருகின்றன. குளிப்பது, வீடுகளைச் சுத்தமாக வைத்துக் கொள்வது போன்ற அன்றாடச் செயல்பாடுகளுக்கு அவை உதவி வருகின்றன.

முழுமையான கல்வித் தேர்ச்சிக்கு முன்மாதிரிகள்

இளம் பருவத்திலிருந்தே சமயக் கல்வியைக் கற்பதை பெரும் பான்மையானோர் வாழ்வின் அங்கமாக கொண்டுள்ளார்கள். இந்துக்கள், இஸ்லாமியர்கள், கிறிஸ்துவர்கள் என அனைத்து சமயத்தைச் சார்ந்தவர்களும் வாழ்க்கை நெறிகளையும் நற் பண்புகளையும் அறிந்துகொள்ள முயற்சி எடுப்பதை அனைவரும் பார்த்துள்ளோம்; அந்தப் பாதை யைக் கடந்து வந்திருப்போம். அந்த வரிசையில், இஸ்லாமிய சமயத்தைச் சேர்ந்த இருவர் மாபெரும் முயற்சியில் தங்களை ஈடுபடுத்தி சாதனை புரிந்து உள்ளனர்.

பக்கவாதம்: மீண்டு வர உதவும் பயிற்சிகள்

பக்கவாதம் ஒருவரை முடக்கி வைக்கும் கொடிய நோய். அந்த நோயால் பாதிக் கப்பட்டவர்கள் அதிலிருந்து மீண்டு வர சில பயிற்சிகள் கைகொடுக்கின்றன. மூளைக்குச் செல்லும் ரத்தம் தடைப் படும்போது பக்கவாதம் ஏற்படுகிறது. இதன் விளைவாக தசைகளை அசைப் பதில் சிரமம் ஏற்படலாம். பக்கவாதத்திலிருந்து மீண்டு வர நீண்டகாலம் எடுக்கலாம். அன்றாடப் பயிற்சித் திட்டத்தைக் கடைப்பிடித்தால் பாதிக்கப்பட்டுள்ள கை, கால்களைக் குணப்படுத்துவதைத் துரிதப்படுத்தலாம்.

‘முள்ளும் மலரும்’ நூல் வெளியீடு

சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகம், அதன் தலைவர் திரு. நா. ஆண்டியப்பனின் ‘முள்ளும் மலரும்’ எனும் நூலின் வெளியீட்டு விழாவிற்கு ஏற்பாடு செய்துள்ளது. இது அவரது ஐந்தாவது நூல்; எனினும் முதல் சிறுகதைத் தொகுப்பு. அந்த நூலின் வெளியீட்டு விழா அடுத்த மாதம் 1ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை மணி 6.00க்கு உமறுப் புலவர் தமிழ்மொழி நிலையத்தில் நடைபெறும்.

சிங்கப்பூர் இலக்கியப் பரிசு; இறுதிப்பட்டியலில் 50 நூல்கள்

இந்த ஆண்டின் சிங்கப்பூர் இலக் கியப் பரிசுக்கான இறுதிப்பட்டியலில் நான்கு மொழிகளிலும் மொத்தம் 50 நூல்கள் இடம்பெற்றுள்ளன. சிங்கப்பூர் புத்தக மன்றம் ஈராண்டுகளுக்கு ஒருமுறை தமிழ், ஆங்கிலம், சீனம், மலாய் ஆகிய நான்கு மொழிகளிலும் புதினம், கவிதை, புதினமல்லாதவை என மூன்று பிரிவுகளில் இப்பரிசை வழங்கி வருகிறது. இறுதிப் பரிசீலனைக்கான பட்டியலை தேசிய புத்தக மன்றம் நேற்று வெளியிட்டது. தமிழில் மூன்று பிரிவுகளிலும் மொத்தம் 11 நூல்கள் தேர்வுபெற்றுள்ளன.

நோன்புப் பெருநாள் கொண்டாடும் புதுமணத் தம்பதி

அப்துல் ரஹீமும் (இடக்கோடி) ரிஸ்வானா பேகமும் (இடமிருந்து நான்காவது) தம்பதியராக இணைந்து கொண்டாடும் முதல் நோன்புப் பெருநாள் இது. ரமலான் மாதத்தில் சமூகத்தில் உதவி தேவைப்படுவோருக்கு உணவு, பரிசுக் கூடை, பற்றுச்சீட்டுகள் வழங்கும் இந்திய முஸ்லிம் சமூக சேவை சங்கத்தின் திட்டத்தில் தம்பதியர் இருவரும் தங்களை இணைத்துக்கொண்டு, தொண்டூழியத்தில் ஈடுபட்டனர். மாதம் முழுவதும் குடும்பத்தினருடன் ஒன்றுசேர்ந்து நோன்பு திறந்து ரஹீம்=ரிஸ்வானா தம்பதியர் குடும்பப் பிணைப்பை வலுப்படுத்தினர். இன்று தங்களின் பெற்றோர்கள், உறவினர்களின் வீடுகளுக்குச் சென்று பெருநாளை விமரிசையாகக் கொண்டாட தம்பதியர் திட்டமிட்டுள்ளனர்.

Pages