You are here

வாழ்வும் வளமும்

பாரதிதாசன் பாடல்களை ஆராய்ந்த ‘சுழலும் சொற்போர்’

வனிதா மணியரசு

பாவேந்தர் பாரதிதாசன் பாடல் களை ஆராயும் வண்ணம் நடந் தேறியது ‘பாவேந்தர் 128 சுழலும் சொற்போர்’. இம்மாதம் 21ஆம் தேதி காலையில் தேசிய நூலக வாரியத்தில் நிகழ்ந்த விழாவில் முன்னாள் நியமன நாடாளுமன்ற உறுப்பினர் திரு இரா.தினகரன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். நிகழ்வின் தொடக்கமாக பாவேந்­தர் நூல் வெளியீடு இடம் பெற்றது. திரு போப் ராஜு நூலை வெளியிட திரு கலைச்செல்வன் நூலைப் பெற்றுக்கொண்டார். கவி­ஞர் இறை மதியழகன் அறி­ முக­­வுரை வழங்கினார்.

பிரபலமாகும் பின்னோக்கிய நடைப்பயிற்சி

ஜப்பான் நாட்டில் பழக்கத்தில் இருக்கும் பின்னோக்கிய நடைப் பயிற்சி தற்போது ஐரோப்பா உள்ளிட்ட மற்ற நாடுகளிலும் பிரபலமாகி வருகின்றது. பின்னோக்கி ஓடும்போது முழங்காலுக்குக் குறைவான அழுத்தம் கிடைப்பதால், முழங்காலில் ஏற்படும் காயங்களும் கணிசமான அளவில் குறைவதாகவும் கூறப்படுகிறது. சாதாரணமாக ஓடுவதைவிட, பின்னோக்கி ஓடும்போது ஒவ்வொரு அடியின்போதும் பின்புறம் மற்றும் பின்னங்கால் களின் தசைகளை அதிகமாக உபயோகிக்கிறோம். இதனால் அதிகப்படியான ஆற்றலும் முழு கவனமும் தேவைப்படுகிறது. கவனம் ஒரு முகப்படுவதால் ஒருவிதத்தில் நம்முடைய மன அழுத்தத்தைக் குறைக்க முடிகிறது.

தமிழர் உறவைப் பறைசாற்றிய ‘சிங்கப்பூர் மாப்பிள்ளை’

மா.பிரெமிக்கா

சிங்கப்பூர் இந்திய நாடகம் மற்றும் குறும்படம் ஆர்வலர்கள் குழு (சிட்ஃபி), இம்மாதம் 20, 21, 22ஆம் தேதிகளில், 400க்கு மேற் பட்ட பார்வையாளர்கள் முன்னிலை யில், ‘சிங்கப்பூர் மாப்பிள்ளை’ எனும் நாடகத்தை நான்கு காட்சி களாக குட்மன் கலை நிலையத்தில் மேடையேற்றியது. பற்பல நாடகங்கள், கவிதைகள், கதைகள் ஆகியவற்றை எழுதி சிங்கப்பூர்த் தமிழ் எழுத்துக் கலைக்குப் பெரும் பங்களித்த நமது முன்னோர்களில் ஒருவரான அமரர் சே.வெ.சண்முகம் இயற் றிய நாடகம் தான் ‘சிங்கப்பூர் மாப் பிள்ளை’.

முகப்பருக்களுக்குத் தீர்வு

தூசிகள், பாக்டீரியா, இறந்த செல் களின் கலவையானது சரும எண் ணெய்ச் சுரப்பிகளில் தங்கி புரப்பி யோனிபாக்டீரியாவை (Propionibacteria) வளர்ச்சி அடையச் செய்வதால் பருக்கள் வெளிப்படு கின்றன. மேலும், எண்ணெய்ப் பசை அதிகம் கொண்ட சருமங்கள் கூட முகப்பருக்களை உண்டாக்கும் தன்மை கொண்டவை. இத்தகைய பருக்கள் முகத்தில் தோன்றினால் அவை முகத்தின் அழகையே கெடுத்துவிடும். அதே போன்று இவற்றைப் போக்குவதும் மிகவும் கடினம். இருப்பினும் ஒருசில இயற்கைப் பொருட்கள், செயல்கள் மூலம் முகத்தில் ஏற் படும் பருக்களைக் குறைக்கலாம்.

‘இன்பத்தமிழும் இளைய தலைமுறையும்’

சிங்கப்பூரிலுள்ள 19 இந்திய முஸ் லிம் அமைப்புகளின் சார்பில் இந் திய முஸ்லிம் பேரவை ஏற்பாடு செய்த ‘இன்பத்தமிழும் இளைய தலைமுறையும்’ எனும் தலைப்பி லான நிகழ்ச்சியில் மலாய் மொழி மாணவர் காலித் சுபாண்டி ஆங்கி லம் கலந்த கொஞ்சு தமிழில் பேசி யதோடு திருக்குறள்கள், அவற் றின் விளக்கங்களையும் சொல்லி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.

'தமிழ்மொழி விழா 2018' நிகழ்ச்சிகள் 

இளம் பிறை
நாள்: நாளை வெள்ளிக்கிழமை இரவு 7- 8.30 மணி
இடம்: தேசிய நூலக வாரியக் கட்டடம்.
“இளம்பிறை” என்ற கருப்பொருள் இளமை, வளர்ச்சியைச் சுற்றி சுழல்கிறது. இந்நிகழ்ச்சியில் பல கவிதை வாசிப்புகள் நடைபெறும். ஒவ்வொரு வாசிப்புக்கும் குறிப் பிட்ட இசையும் இசைக்கப்படும்.

இன்றும் நாளையும் நடக்கவுள்ள நிகழ்வுகள் 

மின்னியல் தமிழ்-புத்தாக்க அணுகுமுறை
நாள்: இன்று பிற்பகல் 2-5 மணி
இடம்: பிக்சல் ஸ்டூடியோ.
பிக்ஸிபிட் நிறுவன ஏற்பாட்டில் நடைபெறும் இந் நிகழ்ச்சியில் நவீன தொழில்நுட்பத்தில் தமிழ் பயன்பாடு குறித்து தெரிந்துகொள்ளலாம். 

தமிழ்மொழி விழா நிகழ்ச்சிகள்

♦ சொல், சொல்லாத சொல்- புதிர்ப்போட்டியின் நிறைவுச்சுற்று நாளை சனிக்கிழமை காலை 9 மணிக்கு உமறுப்புலவர் தமிழ் மொழி நிலைய அரங்கில் நடக்க உள்ளது. இளமைத்தமிழ்.காம் நடத்தும் இப்போட்டியை படைப் பாளர் ஜிடி மணி வழிநடத்துகிறார். ‘சொல்வளக் கையேடு’ நூலை அடிப்படையாகக் கொண்டு இந்தப் போட்டி நடத்தப்படுகிறது. ♦ வாங்க தமிழில் பேசலாம் நிகழ்ச்சி, நாளை பிற்பகல் 2 மணிக்கு உமறுப்புலவர் தமிழ் மொழி நிலைய அரங்கில் நடை பெறும். சிங்கைத் தமிழ் சங்கமும் வளர்தமிழ் இயக்கமும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள இந்நிகழ்ச்சி, மாணவர்கள் ஆங்கிலம் தவிர்த்து, தமிழில் சரளமாகப் பேசிப் பழக வேண்டும் என்ற நோக்கத்துடன் படைக்கப்படுகிறது.

கதை, பாடல்கள் வழி பழங்களின் மருத்துவ குணங்கள்

ரவீணா சிவகுருநாதன்

இன்றைய அவசர யுகத்தில் பலர் பழங்களின் பலன்களை முழுமை யாக அறிவதுமில்லை, போதிய அளவில் அவற்றை உண்ணுவதும் இல்லை. பழங்களில் மிகக் குறைந்த அளவு கொழுப்புச்சத் தும் அதிக அளவு நார்ச்சத்தும் இருக்கின்றன. பழங்களைச் சமைக்காமல் அப்படியே உண்பதால் பழங்களி லுள்ள எல்லா சத்துகளும் உடலுக்கு முழுமையாகக் கிடைக் கின்றன. பழங்களில் பல மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன.

Pages