You are here

திரைச்செய்தி

‘குத்துப் பாட்டுக்கு நடனமாட ஆசை’

ஒற்றைப் பாடலுக்கு நடனமாட வேண்டும் என விரும்புகிறார் இளம் நாயகி மகிமா நம்பியார். அதுவும் குத்துப் பாடலாக அமைந்தால் மிகவும் மகிழ்ச்சி என்கிறார். அண்மையில் இவரது நடிப்பில் ‘அண்ணனுக்கு ஜே’ படம் வெளியாகி உள்ளது. ஒருபக்கம் நடித்துக் கொண்டே மற்றொரு பக்கம் தனது கல்லூரிப் படிப்பையும் தொடர்கிறார் மகிமா. ஆங்கில இலக்கியத்தில் முதுகலைப் பட்டம் பெறுவதில் முனைப்பாக உள்ளாராம். “எனக்கு நடனத்தின் மீது அதிக ஆர்வம் உண்டு. முறைப்படி நடனம் கற்றுள்ளேன். ஆனால் இதுவரை நல்ல குத்துப் பாடலுக்கு ஆடும் வாய்ப்பு சினிமாவில் கிடைக்கவில்லை.

ஒற்றைப் பாடலுக்கு நடனமாடும் அஞ்சலி

திரையுலகில் தொடர்ந்து நீடிக்க வேண்டும் என்பதே தமது விருப்பம் என்கிறார் நடிகை அஞ்சலி. தான் ஏற்கும் ஒவ்வொரு கதா பாத்திரத்திலும் மிகவும் அனுபவித்து நடிப்பதாகவும் சொல் கிறார். நேற்று முன்தினம் தனது 32வது பிறந்தநாளைக் கொண்டாடியவர் தற்போது பேய்க் கதைகளில் அதிகம் நடித்து வருகிறார். “ஏன் இத்தகைய படங்களில் கவனம் செலுத்துகிறீர்கள் என்று சிலர் கேட்கிறார்கள். என்னைப் பொறுத்தவரை திரையுலகில் ஏதேனும் ஒரு வகையில் எனது பங்களிப்பு இருக்கவேண்டும் என விரும்புகிறேன். “பேய்க் கதைகளில் நடிப்பை வெளிப்படுத்த முடிகிறது. அதனால் நடிக்கிறேன்.

வரலாற்றுப் படத்தில் நடிக்கிறார் தனுஷ்

தனுஷ் நடிப்பில் ‘வடசென்னை’, ‘மாரி-2’ ஆகிய இரு படங்களும் அடுத்தடுத்து வெளியாக உள்ளன. இந்நிலையில் அடுத்த படத்தில் கவனம் செலுத்தத் துவங்கி உள்ளார் தனுஷ். இம்முறை வித்தியாசமான கதைக்களத்தைத் தேர்வு செய்துள் ளாராம். ஏ.எல்.விஜய் இந்தப் படத்தை இயக்க உள்ளார். ஆறு லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு தமிழனால் தோற்று விக்கப்பட்ட நாகரிகத்தின் அடை யாளமாகக் குறிப்பிடப்படுவது குமரிக் கண்டம்.

ஊதியம் வராததால் அரவிந்த்சாமி வழக்கு

‘சதுரங்க வேட்டை’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அதன் இரண்டாம் பாகம் தயாராகி இருப் பது தெரிந்த சங்கதிதான். ஆனால் மளமளவென வளர்ந்து வந்த படம், யார் கண்பட்டதோ தெரியவில்லை. அப்படியே முடங் கிக் கிடக்கிறது. இதுதான் விவகாரம். இப்படத் தின் நாயகன் அரவிந்த் சாமிக்கு சம்பளப் பாக்கி இருக்கிறதாம். மொத்தம் ரூ.1.79 கோடி தொகையை தயாரிப்பு தரப்பு தர வேண்டி உள்ளது. பலமுறை கேட்டுப் பார்த்தார் அரவிந்த்சாமி. பலன் இல்லாததால் தயாரிப்பாளர் மனோபாலா மீது வழக்கு தொடுத்துள்ளார். இந்த வழக்கின் விசாரணை நேற்று முன்தினம் நடைபெற்றது.

திரிஷா தாயார்: சிறப்புக் காரணமில்லை

நடிகை திரிஷா தனது சிகையலங்கா ரத்தை மாற்றியமைத்ததற்கு எந்தவொரு சிறப்புக் காரணமும் இல்லை என்று அவரது தாயார் உமா தெரிவித்துள்ளார். அண்மையில் தனது சிகையலங் காரத்தை மாற்றிக்கொண்டார் திரிஷா. புதிய தோற்றத்துடன் கூடிய அவரது புகைப்படத்தையும் வெளியிட்டார். ரஜினி படத்தில் நாயகியாக நடிப்ப தால் தனக்கான கதாபாத்திரத்துக்கு ஏற்ப அவர் தனது சிகையலங்காரத்தை மாற்றியதாகக் கூறப்பட்டது. மேலும் அவர் தனது திருமணத்துக்கு தயாராகி விட்டதாகவும் ஒரு தகவல் பரவியது. இந்நிலையில் இதுபோன்ற வதந்திகளை நம்பவேண்டாம் என்றும் வெறும் ‘பே ஷ’னுக்காகவே சிகையலங்காரத்தை மாற்றிக்கொண்டார் என்றும் உமா கிருஷ்ணன் கூறியுள்ளார்.

ஆவலுடன் காத்திருக்கிறார் பூமிகா

தமிழ்ப் படங்களில் நடிக்கக் கேட்டு நிறைய வாய்ப்புகள் தேடி வருவதாகச் சொல்கிறார் நடிகை பூமிகா சாவ்லா. ஒரு காலத்தில் விஜய், சூர்யா என தமிழில் முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து அசத்தியவர். தற்போது ‘யு டர்ன்’ படத்தில் நடித்துள்ளார். இதுவரை ஏற்றிராத வித்தியாச மான கதாபாத்திரத்தில் நடித்திருப் பதாகவும் அதை ரசிகர்கள் எவ்வாறு ஏற்றுக்கொள்வார்கள் என்பதைக் காண ஆவலாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார் பூமிகா. “எந்தவொரு படமாக இருந்தாலும் கதை நன்றாக இருக்கவேண்டும். படக்குழுவினர் சிறப்பாகச் செயல்பட்டால் மட்டுமே ரசிகர்களிடம் அந்தப் படம் சரியாகச் சென்றுசேரும். “கடந்த 1999ஆம் ஆண்டு சினிமாவில் அறிமுகமானேன்.

ஒத்திவைக்கப்பட்டது சேதுபதியின் ‘96’ பட வெளியீடு

முதல்முறையாக விஜய் சேது பதியும் திரிஷாவும் இணைந்து நடித்துள்ள ‘96’ படத்தின் வெளி யீட்டுத் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்தப் படத்தில் நடித்துள்ளார் நடிகர் ஜனகராஜ். அமெரிக்காவில் இருந்த அவரைத் தேடிப் பிடித்து அழைத்து வந்தனராம். பகவதி பெருமாள், காளி வெங்கட், ‘ஆடுகளம்’ முருகதாஸ், தேவதர்‌ஷினி உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

‘சீமராஜா’வில் இரு பாத்திரங்களில் சிவகார்த்திகேயன்

பொன்ராம், சிவகார்த்திகேயன் மூன்றாவது முறையாக இணைந்துள்ள படம் ‘சீமராஜா’. இதில் சிவா ஜோடியாக சமந்தா நடித்துள் ளார். நாளை வெளியீடு காணும் நிலையில், இப்படத்தில் சிவகார்த்திகேயன் சீமராஜா மற்றும் கடம்பவேல் ராஜா என்று இரண்டு கதாபாத்திரங்களில் நடித்திருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இதன்மூலம் சிவா தங்களுக்கு இரட்டை விருந்து அளித்திருப்பதாக ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். கிராமப் பின்னணியில் குடும்பப் படமாக உருவாகி உள்ளது ‘சீமராஜா’.

பிரியா: நல்ல வாய்ப்புகள் கிடைக்கின்றன

தமிழில் அதிக வாய்ப்புகள் இல்லாத நிலையில் மலையாளக் கரையோரம் ஒதுங்கியுள்ளார் பிரியா ஆனந்த். அங்கு அவர் நடிப்பில் வெளியான ‘எஸ்றா’ என்ற படம் விமர்சன, வசூல் ரீதியில் வெற்றி பெற்றுள்ளது. பிருத்விராஜ் ஜோடியாக இப்படத்தில் பிரியா நடித்துள்ள நிலையில், மலையாளத்தில் மேலும் பல வாய்ப்பு கள் தேடி வருகின்றனவாம். இதையடுத்து திலீப் ஜோடியாக மற்றொரு படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார் பிரியா. இப்படத்தை மோகன்லாலின் நண்பரான உன்னிகிருஷ்ணன் என்பவர் இயக்குகிறார்.

கதாநாயகனாக ஒப்பந்தமான யோகிபாபு

தற்போது ஏராளமான படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார் யோகிபாபு. திரையில் அவரைக் கண்டாலே ரசிகர்கள் சிரிக்கத் தொடங்கி விடுகின்றனர். இப்படி ஒரு வரவேற்பு இருக்கும்போது இயக்குநர்கள் சும்மா இருப்பார்களா? வடிவேலு, விவேக், சந்தானம் வரிசையில் இவரையும் ஒரு படத்தில் நாயகனாக ஒப்பந்தம் செய்துள்ளனர். இந்த நல்ல காரியத்தைச் செய்திருப்பவர் ‘டார்லிங்’ படத்தை இயக்கிய சாம் ஆண்டன். இது முழுநீள நகைச்சுவைப் படமாம். கதையைக் கேட்டபிறகு நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார் யோகிபாபு. இதில் அவருக்குத் தனியார் நிறுவனப் பாதுகாப்பு அதிகாரி வேடமாம்.

Pages