You are here

திரைச்செய்தி

சட்டக்கல்லூரி மாணவராக நடிக்கும் கதிர்

கதிர், கயல் ஆனந்தி நடிப்பில் உருவாகி உள்ள ‘பரியேறும் பெருமாள்’ படம் எதிர்வரும் 28ஆம் தேதி வெளியாகிறது. மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி உள்ள இப்படத்தை நீலம் புரொடக்ஷன் சார்பில் இயக்குநர் பா.ரஞ்சித் தயாரித்துள்ளார். கதிர் சட்டக்கல்லூரி மாணவராக நடித்துள்ளார். இது எளிய மக்களின் வாழ்வியல் குறித்து பேசும் படமாம். தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் படமாக்கி உள்ளனர்.

சிட்டி அபாரம்; நியூகாசல் பரிதாபம்

மான்செஸ்டர்: இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்துப் போட்டியில் மான்செஸ்டர் சிட்டியின் வெற்றிப் பயணம் தொடர்கிறது. நேற்று அதிகாலை நடைபெற்ற ஆட்டத்தில் சிட்டியும் நியூகாசலும் மோதின. இதில் சிட்டி 2=1 எனும் கோல் கணக்கில் வாகை சூடி மூன்று புள்ளிகளைத் தட்டிச் சென்றது. இந்த வெற்றியை அடுத்து, நான்கு ஆட்டங்கள் விளையாடிய நிலையில் பத்து புள்ளிகளுடன் லீக் பட்டியலில் மூன்றாவது இடத்தில் சிட்டி இருக்கிறது. நியூகாசலுக்கு எதிரான ஆட்டத்தைத் தனது சொந்த விளையாட்டரங்கத்தில் விளையாடிய சிட்டி, ஆட்டம் தொடங்கி 8வது நிமிடத்திலேயே கோல் போட்டு முன்னிலை வகித்தது.

‘அரசன்’ படத்தால் சிம்புவுக்கு நெருக்கடி

நடிகர் சிம்பு மீது திரைப்படத் தயாரிப்பு நிறுவனமான ‘பேஸ்சன் மூவி மேக்கர்ஸ்’ சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந் தது. “நடிகர் சிம்புவை நாயகனாக வைத்து ‘அரசன்’ படத்தைத் தயாரிக்கத் திட்டமிட்டிருந்தோம். இதற்காக அவருடன் ஒப்பந்தம் செய்யப்பட்டது. அவருக்கு ரூ.1 கோடி சம்பளம் பேசி முன் பணமாக ரூ.50 லட்சத்தை கடந்த 2013ஆ-ம் ஆண்டு ஜூன் மாதம் 17-ஆம் தேதி வழங்கப்பட்டது. ஆனால் ஒப்பந்தப்படி நடிகர் சிம்பு ‘அரசன்’ படத்தில் நடிக்க முன்வராமல் இழுத்தடித்தார். அவர் சொன்னபடி நடித்து தராததால் படத்தயாரிப்பு நிறுவனத்துக்கு மிகப்பெரிய இழப்பு ஏற்பட்டுள்ளது.

மனதில் நிற்கிறார் சேதுபதி

பெங்களூருவில் ஒரு பெண்ணை கடத்தி வைத்துக்கொண்டு பணம் கேட்டு மிரட்டுகிறார் அனுராக் காஷ்யப். இந்த விஷயம் சிபிஐ அதிகாரியாக இருக்கும் நயன்தாராவிற்குத் தெரிய, அதை கண்டுபிடிக்க முயற்சிக்கிறார். ஆனால், அனுராக் பணம் பெற்றுக் கொண்டு அந்த பெண்ணை கொடூரமாக கொலை செய்து விடுகிறார். மேலும் இதுபோன்று கொலை கள் அடிக்கடி நடக்கும் என்று நயன்தாராவிற்குத் தொலைபேசி மூலம் மிரட்டல் விடுகிறார். இத னை யடுத்து தொடர்ந்து கொலை கள் நடக்கிறது. ஆனால், நயன் தாரா அனுராக்கை கண்டுபிடிக்க முடியாமல் தவிக்கிறார். இது ஒருபுறம் நடக்க, மற்றொரு புறம் சென்னையில் நயன்தாராவின் தம்பியான அதர்வா டாக்டராக இருக்கிறார்.

காய்கறியே என் இளமையின் ரகசியம்

என்றும் பதினாறு என்று கூறுவதுபோல் எப்போதுமே இளமையாகக் காட்சி தருகிறார் சதா. விலங்குகளிடம் இருந்து கிடைக்கும் பால் சம்பந்தப்பட்ட பொருட்கள், இறைச்சி என எதுவும் சாப்பிடமாட்டேன். பால், இறைச்சி உற்பத்திக்காக மருந்துகள் அதிகம் சேர்க்கப்படுவதால் அவற்றை நான் தவிர்த்து வருகிறேன். அதேவேளையில் காய்கறி, சப்பாத்தி உள்ளிட்டவையே என் இளமையின் ரகசியமாக விளங்குகின்றன என்று கூறுகிறார் சதா.

‘8 பேக்ஸ்’ உடல்கட்டுடன் அறிமுகமாகும் ஆதவா

புதியவர்கள் இணைந்து உருவாக்கி உள்ள படம் ‘இராஜாவின் பார்வை இராணியின் பக்கம்’. விகாஷ் பிலிம் இன்டர்நேஷனல் சார்பில் விகாஷ் ரவிச்சந்திரன் தயாரித்துள்ளார். இதில் ஆதவா என்ற புதுமுகம் அறிமுகமாகிறார். முதல் படத்திலேயே 8 பேக் வைத்து நடித்திருக்கிறார். மலையாள நடிகை அவந்திகா நாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் மதுமிதா, கானா உலகநாதன், சிங்கப்பூர் தீபன் நடித்துள்ளனர். “தன்னை ஏமாற்றிய காதலியைப் பழிவாங்க ஒரு பெரிய தாதாவின் உதவியை நாடிச்செல்கிறார் நாயகன். அதன்பின் நடக்கும் விஷயங்களை நகைச்சுவையாகச் சொல்கிறோம். கிளைமாக்ஸ் காட்சி யாரும் ஊகிக்கமுடியாத ஒன்றாக இருக்கும்.

ரூ.1,000 கோடி செலவில் தயாராகும் ‘மகாபாரதம்’

முகேஷ் அம்பானி தயாரிக்கவிருக்கும் ‘மகாபாரதம்’ திரைப்படம் ரூ.1,000 கோடி செலவில் பல மொழிகளிலும் எடுக்கப்பட உள்ளது. இந்தத் திரைப்படத்தில் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு ‘பாகுபலி’ புகழ் பிரபாசுக்கு அழைப்பு விடுத்துள்ளார் இந்தி நடிகர் அமீர்கான். அமீர்கான் ஸ்ரீகிருஷ்ணன் கதாபாத் திரத்தில் நடிக்கிறார் என்றும் மகாபாரதத் தில் மற்ற எல்லா கதாபாத்திரங்களையும் காட்டிலும் பிரசித்தி பெற்ற அர்ஜுனன் கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு ‘பாகுபலி’ பிரபாசுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள தாகவும் தற்போது செய்திகள் வெளியாகி இருக்கின்றன.

நம்பிக்கை வீண் போகவில்லை என்கிறார் வி‌‌‌ஷால்

‘இரும்புத்திரை’ தமக்கு முக்கியமான படமாக அமையும் என்று நம்பிக்கை வைத்தது வீண் போகவில்லை என்று விஷால் தெரிவித்துள்ளார். பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் விஷால் நடித்து வெளியான ‘இரும்புத் திரை’ படம், நூறு நாட்களைக் கடந்து ஓடிக் கொண்டிருக்கி றது. இதற்கான வெற்றி விழா, சென்னையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் பேசிய அவர், இவ்விழாவை பெருமைக்காக நடத்த வில்லை என்றார். “எல்லாப் படங்களுமே வெற்றி அடையும். ஆனால் சில படங்களைத்தான் ரசி கர்கள் மனதார வாழ்த்துவார் கள். அதுபோன்று இந்தப் படம் எனக்கு அமையும் என நம்பினேன். “இதற்காக இயக்குநர் மித்ரனுக்கு நான் நன்றியும் வாழ்த்தும் தெரிவிக்க வேண் டும்.

ஜெயம் ரவிக்கு ஜோடியான காஜல்

ஜெயம் ரவி நடித்துள்ள புதிய படத்தில் அவரது ஜோடியாக ஒப்பந்தமாகியுள்ளார் காஜல் அகர்வால். அறிமுக இயக்குநர் இயக்கும் இப்படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகிறது. ஏற்கெனவே ஜெயம் ரவியின் ‘போகன்’ படத்தில் அவருடன் ஜோடி சேர இருந்தார் காஜல். ஆனால் சில காரணங்களால் அதில் அவர் நடிக்கவில்லை. அப்படக்குழு பின்னர் ஹன்சிகாவை ஒப்பந்தம் செய்தது. ஜெயம் ரவி அடுத்து தனது சகோதரர் மோகன்ராஜா இயக்கத்தில் ‘தனி ஒருவன்- 2’ படத்தில் நடிக்க உள்ளார். அதற்கு முன்னதாக குறைந்த செலவில் தயாராகும் படத்தில் நடிக்க முடிவு செய்துள்ளார். நகைச்சுவை கலந்த குடும்பப் படமாக இது உருவாகிறதாம். “ஜெயம் ரவி திறமை வாய்ந்த நடிகர்.

ஆன்ட்ரியா: கவர்ச்சி வேடம் வேண்டாம்

இனி கவர்ச்சியாக நடிப்பதில்லை என்று முடிவெடுத்துள்ளாராம் ஆன்ட்ரியா. குறிப்பாக, கதாநாயகர் களுடன் நெருக்கமாக இருப்பது, புகைபிடிப்பது போன்ற காட்சிகளை அறவே தவிர்க்கிறாராம். வித்தியாசமான கதாபாத்திரங்கள் என்றால் சற்றும் யோசிக்காமல் கால்‌ஷீட்டை அள்ளிக் கொடுப்பார் என்று பெயரெடுத்துள்ளார் ஆன்ட்ரியா. ‘தரமணி’, ‘விஸ்வரூபம்- 2’ ஆகிய இரு படங்களிலும் நடிப்பால் அசத்தினார். குறிப்பாக, ‘விஸ்வ ரூபம்-2’ படத்தில் சண்டைக் காட்சிகளிலும் மிரட்டியிருந்தார். தற் போது ‘வடசென்னை’யில் நடிப்பவர், இப்படம் தனக்கான ரசிகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் என உறுதியாக நம்புகிறாராம்.

Pages