You are here

திரைச்செய்தி

திருமணம் குறித்த லட்சியத்துடன் வாழும் இளைஞனின் கதை

கிங் மூவி மேக்கர்ஸ் நிறுவனம் சார்பில் பி.‌ஷமீம் இப்ராகிம் தயாரிக்கும் படம் ‘கன்னி ராசி’. இதில் விமல் நாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடி வரலட்சுமி. இவர்களுடன் பாண்டியராஜன், ரோபோ சங்கர், யோகிபாபு உள்பட பலர் நடிக்கிறார்கள். நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகும் படம் இது. எஸ்.முத்துக்குமரன் இயக்குகிறார். “பெற்றோர் பார்த்து தேடிப்பிடிக்கும் பெண்ணை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பதுதான் நாயகனின் விருப்பம். ஆனால் வரலட்சுமிக்கு அவர் மீது காதல் மலர்கிறது.

‘கனவுகள் நிஜமாகின்றன’

“ஓவியங்கள் தீட்டுவது எனக்கு ரொம்பப் பிடித்தமான விஷயம். விண்வெளி, விண்மீன்கள், வேற்றுக்கிரங்கள் குறித்தெல்லாம் அடிக்கடி கனவு காண்பேன். இந்தக் கனவுகளில் கண்டவை எல்லாம் பெரும்பாலும் ஆறு மாதங்கள் அல்லது ஓராண்டுக்குள் நிஜத்தில் நடக்கும். இல்லையெனில் கனவில் கண்ட விஷயங்களை எல்லாம் ஏதேனும் திரைப்படத்திலாவது பார்க்க நேரிடும்,” என்று ஆச்சரியமூட்டுகிறார் இளம் நாயகி நிவேதா பெத்துராஜ்.

கனவில் காணும் விஷயங்கள் குறித்து குறிப்புகள் எழுதி வைத்து, பின்னர் ஓவியமாகத் தீட்டுவது இவரது வழக்கமாக உள்ளது. இவ் வாறு நிறைய ஓவியங்களை அடுத்தடுத்து வரைந்து சேகரித்து வைத்துள்ளாராம். காதல் குறித்து?

பத்து லட்சம்: நன்றி கூறும் சாய்பல்லவி

இளம் நாயகி சாய் பல்லவியை டுவிட்டர் தளத்தில் பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை 10 லட்சத்தைக் கடந்துள்ளது. இது மலையாளத் திரையுலகத்தினரை ஆச்சரியப்படுத்தி உள்ளது. ‘பிரேமம்’ மலையாளப் படம் மூலம் ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தவர் சாய்பல்லவி. இதையடுத்து தமிழ், மலையாளம், தெலுங்கு என மும்மொழிப் படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் மிகக் குறுகிய காலத்தில் டுவிட்டரில் இவரைப் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை மளமளவென அதிகரித்துள்ளது. இது சாய் பல்லவிக்கும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.

கீர்த்தி சுரே‌ஷுக்கு வந்த புது ஆசை

தனது தந்தை தயாரிக்கும் படத்தில் நடிக்கவேண்டும் என்று விரும்புகிறாராம் கீர்த்தி சுரேஷ். அது மட்டுமல்ல, அந்தப் படத்தைத் தனது மூத்த சகோதரி இயக்கவேண்டும் என்றும் கூறியுள்ளார். “என் அம்மாவுடனும் பாட்டியுடனும் இணைந்து நடிக்க வேண்டும் என்பது என் ஆசை. அப்படத்துக்கு என் தந்தை தயாரிப்பாளராக இருக்க வேண்டும் என விரும்புகிறேன். அதை என் அக்கா இயக்கினால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று யோசிக்கிறேன்,” என்று தெரிவித்துள்ளார் கீர்த்தி சுரேஷ். இவரது தந்தை உண்மையாகவே தயாரிப்பாளர் தான். கீர்த்தியின் தாய் மேனகா ரஜினியுடன் ‘நெற்றிக்கண்’ படத்தில் நடித்தவர். பாட்டியும் சில படங்களில் நடித்துள்ளார்.

உதயநிதிக்கு ஜோடியான கயல் ஆனந்தி

மிஷ்கின் இயக்கத்தில் உதயநிதி நடிக்கும் படத்துக்கு ‘சைக்கோ’ எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. சீனு ராமசாமி இயக்கத்தில் உதயநிதி நடித்த ‘கண்ணே கலைமானே’ படம் விரைவில் வெளியீடு காண உள்ளது. இதில் உதயநிதி ஜோடியாக தமன்னா நடித்துள்ளார். இதையடுத்து கே.எஸ். அதியமான், மிஷ்கின் இயக்கும் படங்களில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார் உதயநிதி. ‘தூண்டில்’, ‘பிரியசகி’ உள்ளிட்ட படங்களை இயக்கியவர் கே.எஸ்.அதியமான். அடுத்து திகில் கலந்த கதையை மையமாக வைத்து ஒரு படத்தை இயக்க உள்ளார். இதில் உதயநிதி ஜோடியாக கயல் ஆனந்தியை ஒப்பந்தம் செய்துள்ளனர். ஓஎஸ்டி பிலிம்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார்.

இசைக்கலைஞராக மாறிய தனுஷ்

இயக்குநர் வெற்றிமாறன்-, தனுஷ் இருவரும் மூன்றாவது முறையாக இணைந்துள்ள படம் ‘வடசென்னை’. அண்மையில் வெளியான இதன் முன்னோட்டக் காட்சிக்கு ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பு கிடைத்தது. இந்நிலையில் இப்படத்தில் தனுஷ் நாயகனாக மட்டுமல்லாமல் இசைக்கலைஞராகவும் தனது பங்களிப்பை அளித்திருப்பது தெரியவந்துள்ளது. ‘வடசென்னை’ இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இது தொடர்பாக சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில் ‘வடசென்னை’ படம் தொடர்பாக அண்மைய தகவல் எதையேனும் வெளியிடுங்கள் எனப் பலரும் தம்மை நச்சரித்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

பதில் கூறாமல் நழுவும் அனுஷ்கா

ரசிகர்கள் தன்னிடம் ‘ஆட்டோ கிராஃப்’ கேட்டு காகிதத்தையோ சிறு புத்தகத்தையோ நீட்டினால் சலித்துக்கொள்ளாமல் கையெ ழுத்துப் போட்டுத் தருகிறார் அனுஷ்கா. அதில் ‘எப்போதும் சிரியுங்கள்... அன்புடன்’ என்று எழுதி கையெ ழுத்திடுவதுதான் அவரது வழக்கம். இதுநாள் வரை சமூக வலைத்தளங்களில் அவ்வளவாக நாட்டமின்றி இருந்தவர் தற்போது இன்ஸ்டாகிராமில் அதிகமான பதிவுகளை வெளியிட்டு வருகிறார். ரசிகர்களுடன் அவ்வப்போது உரையாடவும் செய்கிறார். பொதுவாக எத்தகைய கேள்வியாக இருந்தாலும் பதில் சொல்வது அனுஷ்காவின் வழக்கம். ஆனால் திருமணம் என்று யாரேனும் பேசத் துவங்கினால் மட்டும் கவனமாக விலகிவிடுகிறார்.

காதலரை மணந்தார் சுவாதி

பிரபல நடிகை சுவாதி தனது காதலரைக் கரம்பிடித்துள்ளார். தனியார் விமான நிறுவனத்தில் விமானியாகப் பணியாற்றும் விகாஷ் என்பவரும் காதலித்து வந்தனர். இரு வீட்டாரும் சம்மதித்ததை அடுத்து இருவருக்கும் கடந்த வியாழக்கிழமை ஹைதராபாத்தில் திருமணம் நடைபெற்றது. இதையடுத்து நேற்று கொச்சியில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி சிறப் பாக நடந்தேறியது. விகாஸ் இந்தோ னீசியாவில் வசிக்கிறார். மிக விரை வில் கணவருடன் ஜகார்த்தாவில் குடியேற உள்ளார் சுவாதி. ‘சுப்ரமணியபுரம்’ படம் மூலம் தமிழ்ச் சினிமாவில் அறிமுகமானவர் சுவாதி. தொடர்ந்து பல படங்களில் நடித்து ரசிகர்களிடம் பாராட்டு களைப் பெற்றார்.

புகைப்படக் கலைஞர் வேடத்தில் சேதுபதி

முதன்முறையாக விஜய் சேதுபதி யுடன் இணைந்துள்ளார் திரிஷா. இருவரும் ஜோடியாக நடிக்கும் ‘96’ படம் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி உள்ளது. மெட்ராஸ் என்டர்பிரைசஸ் சார்பில் நந்தகோபல் தயாரித்துள்ள இப்படத்தில் ஜனகராஜ், தேவ தர்‌ஷினி ‘ஆடுகளம்’ முருகதாஸ், கவிதாலயா கிருஷ்ணன், பகவதி பெருமாள் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். பிரேம்குமார் இயக்கி உள்ளார். இவர் ‘பசங்க’, ‘சுந்தரபாண்டி யன்’, ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ உள்ளிட்ட படங் களுக்கு ஒளிப்பதிவு செய்தவர். தற்போது இயக்குநராக அறிமுக மாகிறார். விஜய் சேதுபதி முதன்முறை யாக புகைப்படக் கலைஞராக நடித்துள்ளாராம்.

சட்டக்கல்லூரி மாணவராக நடிக்கும் கதிர்

கதிர், கயல் ஆனந்தி நடிப்பில் உருவாகி உள்ள ‘பரியேறும் பெருமாள்’ படம் எதிர்வரும் 28ஆம் தேதி வெளியாகிறது. மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி உள்ள இப்படத்தை நீலம் புரொடக்ஷன் சார்பில் இயக்குநர் பா.ரஞ்சித் தயாரித்துள்ளார். கதிர் சட்டக்கல்லூரி மாணவராக நடித்துள்ளார். இது எளிய மக்களின் வாழ்வியல் குறித்து பேசும் படமாம். தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் படமாக்கி உள்ளனர்.

Pages