இலங்கை: ஐந்து வாரங்களில் இரண்டாவது முறை அவசரநிலை பிரகடனம்

இலங்கையில் அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் மோசமடைந்து வந்துள்ளதைத் தொடர்ந்து, அதிபர் கோத்தபாய ராஜபக்சே நேற்று வெள்ளிக்கிழமை (மே 6) இரவு மீண்டும் அவசரநிலையைப் பிரகடனப்படுத்தினார்.

அதையடுத்து, இன்று சனிக்கிழமை (மே 7) தலைநகர் கொழும்பில் வீதிகள் அமைதியாகக் காணப்பட்டன.

இலங்கையில் ஐந்து வாரங்களில் இரண்டாவது முறையாக அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்த விவரங்கள் பொதுவெளியில் இன்னும் வெளியிடப்படவில்லை. என்றாலும், முன்பு அறிவிக்கப்பட்டிருந்த அவசரநிலைச் சட்டங்கள், ராணுவத்தைப் பணியமர்த்த அதிபருக்குக் கூடுதல் அதிகாரம் வழங்கின. மேலும் அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களைக் கலைக்கவும் அதிபருக்கு அதிகாரம் கிடைக்கும்.

“இலங்கையில் நிலவிவரும் பொது அவசரநிலை நிலையைக் கருத்தில்கொண்டு அதிபர் இந்த முடிவை எடுத்துள்ளார். பொது ஒழுங்கை நிலைநாட்டவும் சமூகத்தினருக்குத் தேவையான அத்தியாவசிய சேவையை உறுதிசெய்யவும் இந்த முடிவை அவர் எடுத்துள்ளார்,” என்று அதிபர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அவசரநிலையை மீட்டுக்கொள்ளுமாறு இலங்கை வழக்கறிஞர்கள் சங்கம் அதிபர் கோத்தபாயவிடம் வலியுறுத்தியுள்ளது. அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது குறித்து அச்சங்கம் ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தியுள்ளது.

நேற்று நள்ளிரவுக்கு முன்பு அவசரநிலை அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அமைதியின்மை நிலவியதாகத் தகவல் எதுவும் வெளியாகவில்லை. ஏற்கெனவே ஆர்ப்பட்டங்கள் அரங்கேறிய மத்திய கொழும்பில் போக்குவரத்து வழங்கம்போல இயங்கியது.

அவசரநிலை அறிவிக்கப்பட்ட பிறகும் அதிபர் செயலகத்துக்கு வெளியே இடம்பெற்ற அரசாங்க எதிர்ப்பு பிரசாரத்தைச் செவிமடுக்க ஏறக்குறைய 100 பேர் ஒன்றுதிரண்டனர்.

“அவசரநிலை பிரகடனம், ஆர்ப்பாட்டங்களை நிறுத்தாது,” என்றார் ஆசிரியர் வஹீடா லஃபீர்.

இலங்கையில் மீண்டும் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டு உள்ளதற்கு அந்நாட்டின் எதிர்க்கட்சியும் சில மேற்கத்திய நாடுகளும் கண்டனம் தெரிவித்துள்ளன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!