முதல் தொகுதி நோவாவேக்ஸ் கொவிட்-19 தடுப்பூசி சிங்கப்பூர் வந்துசேர்ந்தது

அமெரிக்க உயிரித் தொழில்நுட்ப நிறுவனமான நோவாவேக்ஸ் தயாரித்துள்ள கொவிட்-19 தடுப்பூசியின் முதல் தொகுதி நேற்று புதன்கிழமை (மே 4) சிங்கப்பூர் வந்துசேர்ந்தது. இந்த மாத இறுதிக்குள் 21 இடங்களில் இந்தத் தடுப்பூசி வழங்கப்படும்.

முன்னாள் பீஷான் பார்க் உயர்நிலைப்பள்ளி இருந்த இடத்தில் அமைக்கப்பட்டுள்ள தனது முதல் கூட்டுப் பரிசோதனை, தடுப்பூசி மையத்தில் நுவாக்சோவிட் தடுப்பூசி போடப்படும் என்று சுகாதார அமைச்சு புதன்கிழமை இரவு தெரிவித்தது. இந்த மாத இறுதியில் செயல்படத் தொடங்கவிருக்கும் இத்தகைய மையங்களில் கொவிட்-19 பரிசோதனை செய்துகொள்வதோடு தடுப்பூசியும் போட்டுக்கொள்ளலாம்.

அத்துடன், இந்த மாத இறுதியில் 20 பொதுச் சுகாதார தயார்நிலை மருந்தகங்களிலும் இந்தத் தடுப்பூசி கிடைக்கும்.

நுவாக்சோவிட், புரதம் சார்ந்த தடுப்பூசியாகும். அறிகுறி உடைய கொவிட்-19க்கு எதிராக இந்தத் தடுப்பூசி ஏறக்குறைய 90 விழுக்காடு செயல்திறன் கொண்டிருந்ததாக சில மருத்துவ ஆய்வு முடிவுகள் காட்டின. ஒப்புநோக்க, ஃபைசர்-பயோஎன்டெக், மொடர்னா தடுப்பூசிகள் ஏறத்தாழ 95 விழுக்காடு செயல்திறன் கொண்டுள்ளன.

நுவாக்சோவிட் தடுப்பூசியை வழங்க, தேர்ந்தெடுக்கப்பட்ட பொதுச் சுகாதார தயார்நிலை மருந்தகங்களுடன் தான் பணியாற்றி வருவதாகக் கூறிய சுகாதார அமைச்சு, எதிர்வரும் வாரங்களில் இதுகுறித்த மேல்விவரங்கள் அறிவிக்கப்படும் எனச் சொன்னது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!