பணிப்பெண்களைப் பணியமர்த்த ஆண்டுக்கு 1% விண்ணப்பங்கள் மட்டுமே நிராகரிப்பு

வெளிநாட்டு இல்லப் பணிப்பெண்களை வேலைக்கு அமர்த்துவதற்கு விண்ணப்பித்த கிட்டத்தட்ட அனைவருமே வெற்றியடைந்துள்ளனர். கடந்த ஐந்தாண்டுகளில் ஆண்டுக்கு 1% அல்லது 2,000 விண்ணப்பங்கள் மட்டுமே நிராகரிக்கப்பட்டன என்று மனிதவள துணை அமைச்சர் கான் சியோ ஹுவாங் செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 5) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

ஓர் இல்லப் பணிப்பெண்ணைப் பணியமர்த்துவதற்கான விண்ணப்பதாரரின் தகுதியை அவரது வருமானம், பணிப்பெண்ணுக்கு முறையான, பாதுகாப்பான தங்குமிடத்தை வழங்கும் திறன், குடும்பத்தின் பராமரிப்புத் தேவைகள் உள்ளிட்ட பல்வேறு காரணிகளின் அடிப்படையில் மனிதவள அமைச்சு மதிப்பிடுகிறது.

“விண்ணப்பம் அங்கீகரிக்கப்படுவதில் வருமானம் மட்டுமே காரணியாக இருப்பதில்லை. இல்லப் பணிப்பெண்ணை வேலைக்கு அமர்த்துவதற்கான விண்ணப்பதாரரின் நிதித் திறனைத் தீர்மானிக்க, வழக்கமான வருமானம் இல்லாத, ஆனால் சேமிப்பைக் கொண்ட ஓய்வுபெற்ற மூத்த குடிமக்கள் போன்ற பிற தகவல்களையும் அமைச்சு பரிசீலிக்கலாம்,” என்று திருவாட்டி கான் மேலும் கூறினார்.

“வொர்க்பெர்மிட் அனுமதியைப் புதுப்பிக்கும் விண்ணப்பங்களை மதிப்பிடுவதில், முதலாளிகள் முன்பு சம்பளம் அல்லது தீர்வை செலுத்துவதில் தவறிவிட்டார்களா என்பது போன்ற பதிவுகளையும் நாங்கள் கருத்தில் கொள்கிறோம். எனவே, எங்களிடம் கடுமையான வருமான அளவுகோல் இல்லை. மேலும், வீட்டு வருமானத்தை மட்டும் வைத்து விண்ணப்பங்களை நிராகரிக்க மாட்டோம். மாறாக அவற்றைப் பரிசீலிக்க பல காரணிகள் உள்ளன,” என்று திருவாட்டி கான் கூறினார்.

கடந்த ஆண்டு டிசம்பர் நிலவரப்படி சிங்கப்பூரில் வொர்க்பெர்மிட் அட்டைகளை வைத்திருக்கும் 246,300 வெளிநாட்டு இல்லப் பணிப்பெண்கள் வேலை பார்த்தனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!