பந்தய கார்-டாக்சி மோதி நொறுங்கிய விபத்தில் இரண்டு பேர் காயம்

பந்தய கார்-டாக்சி மோதி நொறுங்கிய விபத்தில் இரண்டு பேர் காயம்

1 mins read
65bb8af7-70f3-4f02-b064-c27749166901
-

யீ‌ஷுன் அவென்யூ 1ல் நேற்று அதிகாலையில் ஒரு பந்தய காரும் டாக்சியும் மோதி விபத்துக்குள்ளாயின. விபத்தில் இரு வாகன ஓட்டுநர்களும் காயமடைந்தனர். விபத்தில் சிக்கிய சிவப்புநிற மெக்ளேரன் பந்தய காரும் நீல நிற கம்ஃபர்ட் டாக்சி யும் நொறுங்கிப்போய்விட்டன. சமூக இணையத்தளங்களில் பதிவேற் றப்பட்ட படங்களும் காணொளியும் வாகனங்கள் நொறுங்கிக் கிடந்ததைக் காட்டின. பந்தைய காரின் வலதுபுறம் முற்றிலும் சேதம் அடைந்திருந்தது.

அந்த கார் சாலை ஓர மேடையில் காணப்பட்டது. கம்ஃபர்ட் டாக்சி ஒரு பேருந்து நிறுத்தத்திற்கு அருகே இருந் தது. நொறுங்கிய கார்களின் பகுதிகளும் பேருந்து அறிவிப்புக் கம்பம் ஒன்றின் உடைந்த பகுதிகளும் எங்கும் கிடந்தன. டாக்சியை ஓட்டி வந்த 56 வயது ஓட்டுநரும் பந்தய காரை ஓட்டி வந்த 28 வயது ஆடவரும் சுயநினைவுடன் கூ டெக் புவாட் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக போலிஸ் தெரிவித்தது.