முஸ்லிம்களுக்கு சிறிசேன வாழ்த்து; பொய்ச் செய்திகளுக்கு எதிராகப் புதிய சட்டம்

முஸ்லிம்களுக்குத் தமது நெஞ்சார்ந்த வாழ்த்துகளைத் தெரிவிப்பதாகக் கூறிய இலங்கையின் அதிபர் மைத்திரிபால சிறிசேன, வேதனையையும் சந்தேகத்தையும் களைந்து, சகோதரத்துவம் மிகுந்த எதிர்காலத்திற்காக வேண்டிக்கொள்ள அவர்களிடம் கேட்டிருக்கிறார். பிறரின் பசியை அனுபவ ரீதியாகக் கற்றுத்தந்து தியாக மனப்பான்மையை வளர்க்கும் ஒரு சமயம், சமுதாயத்திற்குப் பொக்கிஷமாக இருப்பதாக அவர் நேற்று தமது ரமலான் கொண்டாட்ட உரையில் தெரிவித்தார்.

திங்கட்கிழமை இலங்கையின் ஒன்பது முஸ்லிம் அமைச்சர்களும் முஸ்லிம்களாக இருக்கும் இரண்டு மாநில ஆளுநர்களும் பதவி விலகியதை அடுத்து அதிபர் சிறிசேனவின் இந்தக் கருத்துகள் வெளிவந்தன.

கொழும்பில் கிறிஸ்துவர்கள் புனிதமாகக் கருதும் ஈஸ்டர் தினத்தன்று அந்நாட்டின் தலைநகரில் நிகழ்ந்த வெடிகுண்டு தாக்குதல்களின் பின்னணியில் முஸ்லிம் அமைச்சர்களின் பங்களிப்பு இருப்பதாகக் கருதும் பிரபல பெளத்த துறவி அத்துராயில ரத்தன, உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டார். அவருக்கு ஆதரவு தெரிவிக்க கொழும்பின் கத்தோலிக் தேவாலயத் தலைவர் மால்கம் ரஞ்சித் ரத்தனவை நேரடியாகச் சந்தித்தார். அந்தச் சந்திப்பு மதவெறியை மேலும் அதிகரிப்பதாக இலங்கையின் நிதியமைச்சர் மங்கள சமரவீர கண்டித்தார்.

இதற்கிடையே, பொய்ச் செய்திகளைப் பரப்புவோருக்கு எதிராக இலங்கை அரசாங்கம் ஐந்து ஆண்டுகள் நீடிக்கும் சிறைத்தண்டனைகளை அறிமுகம் செய்யவுள்ளது. ஈஸ்டர் தின தாக்குதல்களை அடுத்து இணையத்தில் பொய்ச் செய்திகளும் வதந்திகளும் பெருக்கெடுத்து வழிவதாக அதிகாரிகள் கண்டனர்.

சிறைத்தண்டனையுடன் குற்றவாளிகளுக்கு ஒரு மில்லியன் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என இலங்கை அரசாங்கம் நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!