இன நல்லிணக்கம் மீதான தாக்குதலே ஆகப்பெரியது

உலக நாடுகளும் மக்களும் வெறுப்புணர்வையும் தனிமைப் படுத்தப்படுவதையும் எதிர்க்க வேண்டும் என்பதை இந்த நூற்றாண்டின் ஒவ்வொரு சவா லும் நமக்கு எடுத்துக்காட்டு வதாக ஜோர்தானிய மன்னர் அப்துல்லா கூறியுள்ளார். இனங்களுக்கு இடையே நிலவும் நல்லிணக்கம், பரஸ்பர மரியாதை, நம்பிக்கை உள்ளிட்ட வற்றின் மீது விடுக்கப்படும் மிரட்டல் ஒடுக்கப்படவேண்டும் என்று அவர் அறைகூவல் விடுத்தார். சிங்கப்பூர் வந்திருக்கும் ஜோர்தானிய மன்னர், ராஃபிள்ஸ் சிட்டி மாநாட்டு மையத்தில் ‘பிணைப்புமிக்க சமூகங்கள்’ பற்றிய அனைத் துலக மாநாட்டில் நேற்று கலந்து கொண்டு பேசியபோது இதனை தெரிவித்தார்.கிட்டத்தட்ட 40 நாடுகளைச் சேர்ந்த ஏறத்தாழ 1,000 கல்வி யாளர்கள், அரசாங்க அதிகா ரிகள், சமய அமைப்புகளைப் பிரதிநிதிக்கும் உறுப்பினர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்றனர்.

இந்த மூன்று நாள் மாநாட்டை அதிபர் ஹலிமா யாக்கோப் நேற்று முன்தினம் திறந்து வைத்து தொடக்க உரையாற்றினார். அதனையடுத்து ஜோர்தா னிய மன்னர் நேற்று சிறப்புரை நிகழ்த்தினார்.“பொருளியல் வளர்ச்சி, அமைதியை நிலைநாட்ட முற்படு வது, சுற்றுச்சூழலைப் பாது காப்பது, உலகளாவிய பாதுகாப்பு உள்ளிட்ட இலக்குகளை அடைய நாம் ஒத்துழைத்து, வலிமையை ஒன்றுதிரட்ட வேண்டியுள்ளது,” என்று மன்னர் சொன்னார்.இனங்களுக்கு இடையே நிலவும் புரிந்துணர்வை மேம்படுத் துவதில் அனைவரும் கவனம் செலுத்த வேண்டிய மூன்று அம்சங்களை அவர் பட்டியலிட்டார்.

அமைதி, நல்லிணக்கத்தை நாடுவோரை ஒன்றுதிரட்டுவது, நவீன உலகில் உள்ள கருவிகளைத் தங்களுக்கு சாதகமாக பயன் படுத்திக்கொள்வது, நீண்டகால நலனுக்கு கடப்பாடு கொள்வது ஆகியன அவை.நியூசிலாந்தின் கிறைஸ்ட்சர்ச் நகரிலும் இலங்கையிலும் நடத்தப் பட்ட அண்மைய பயங்கரவாத தாக்குதல்களைச் சுட்டிய மன்னர், சமூகங்களைப் பிளவுபடுத்த பயங்கரவாதிகள் விளைவிக்கும் தீங்கை அவை காட்டியதாக சொன்னார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!