பெயர் மாற்றம் காணும் மாபெரும் சிங்கப்பூர் விற்பனை

இவ்வாண்டின் மாபெரும் சிங்கப்பூர் விற்பனை வெள்ளிக்கிழமை (ஜூன் 21ஆம் தேதி) முதல் ஜூலை 28ஆம் தேதி வரை நடைபெறும். “மாபெரும் சிங்கப்பூர் விற்பனை” இப்போது ‘ஜிஎஸ்எஸ்: எக்ஸ்பிரியன்ஸ் சிங்கப்பூர்’ எனப் பெயர் மாற்றம் கண்டுள்ளது.விலைக்கழிவுகளுக்கு மட்டுமின்றி விழாவுக்கான பல்வேறு அம்சங்களைக் கொண்ட ஒரு காலக்கட்டமாக இது இருக்கும் என்று சிங்கப்பூர் சில்லறை விற்பனையாளர் சங்கத்தின் தலைமை நிர்வாகி திருவாட்டி ரோஸ் டோங், ‘ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்’ பத்திரிகையிடம் தெரிவித்தார். “சிங்கப்பூரில் ஆண்டு முழுவதும் விலைக்கழிவுகள் வழங்கப்படுவதால் மாபெரும் சிங்கப்பூர் விற்பனை விலைக்கழிவுகளைக் கடந்த ஒன்றாக இருக்கவேண்டும்,” என்று திருவாட்டி ரோஸ் டோங் தெரிவித்தார்.

ஆண்டுக்கு ஒருமுறை இடம்பெறும் இந்த மாபெரும் விற்பனையின்மீது பொதுமக்களின் ஆர்வம் குறைந்திருப்பதை ஒப்புக்கொண்ட திருவாட்டி டோங், மாற்றத்திற்கான அவசியம் வந்துவிட்டதாகக் கூறினார்.இந்த விற்பனைக்கான காலகட்டம் பாதியாகக் குறைக்கப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். இதனால் அதில் முன்கூட்டியே கலந்துகொள்ள வாடிக்கையாளர்கள் ஊக்குவிக்கப்படுவர் என நம்புவதாக அவர் சொன்னார்.

ஆர்ச்சர்ட் ரோட்டுக்கும் கெர்ன்ஹில் ரோட்டுக்கும் இடையிலான சந்திப்பில் ஆடை அலங்கார நிகழ்ச்சியுடன் இந்த மாபெரும் விற்பனை தொடங்கும். ஆடை அலங்கார நிகழ்ச்சி இன்று பிற்பகல் 3 மணி முதல் 5.30 மணி வரை இடம்பெறும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!