சவால்மிக்க பணியைத் திறம்பட கையாண்ட தீயணைப்பாளர்கள்

கடந்த வெள்ளியன்று மாலை 5.10 மணிக்கு ஜூரோங் தீயணைப்பு நிலையத்திற்கு ஓர் அழைப்பு வந் தது. மத்திய செயல்பாட்டுத் தளத் திலிருந்து எண் 43, ஜாலான் புரோவில் தீச்சம்பவம் என்ற செய்தி அவர்களுக்குக் கிடைத் தது.

நூற்றுக்கணக்கான ‘எல்பிஜி’ எரிவாயுத் தோம்புகள் வெடித்துக் கொண்டிருக்கும் பயங்கரத்தைப் பார்க்கப்போகிறார்கள் என்று அவர்கள் எதிர்பார்க்கவில்லை.

ஜூரோங் தீயணைப்பு நிலையத் தின் முதல் குழு சம்பவ இடத் திற்குச் சென்ற 10வது நிமிடத்தில் நிலையத்தின் தளபதி 36 வயது கேப்டன் தினேஷ் வெள்ளைச்சாமி அவ்விடத்தில் இருந்தார்.

“கரும்புகை சூழ்ந்திருந்தது. எரிவாயுத் தோம்புகளிலிருந்து ‘ஹிஸ்’ எனும் சத்தம் வெளியானது நன்கு கேட்டது. அப்படி என்றால் வெப்பத்தின் தாக்கத்தில் தோம்பு வெடிக்கும் என்று எதிர்பார்க்கலாம். சிறிது நேரத்தில் தோம்புகள் வெடித் ததையும் பறந்ததையும் கண்டேன். எங்கும் வெடிப்புச் சத்தம் கேட்டது,” என்றார் கேப்டன் தினேஷ்.

“திரைப்படத்தில் காண்பதைப் போன்றே இருந்தது,” என்ற அவர், தமது ஆறு ஆண்டுகாலப் பணி யில் தாம் கண்ட மாபெரும் தீச்சம் பவம் இதுதான் எனக் குறிப்பிட்டார்.

இரண்டு காற்பந்துத் திடல் அளவுள்ள வளாகத்தில் சேமித்து வைக்கப்பட்டிருந்த தோம்புகளில் ஏற்பட்ட தீயை அணைக்கும் முயற் சியில் சுமார் 120 வீரர்கள் ஈடுபட்டி ருந்தனர். சிங்கப்பூர் குடிமைத் தற் காப்புப் படையின் 35 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தன.

“கிட்டத்தட்ட ஒரு மணி நேரத் திற்கு மேல் பிரிவுத் தளபதி பொறுப்பேற்கும் வரையில் தீய ணைப்பு முயற்சியின் ஒருங்கி ணைப்புத் தலைவராக நான் பணி யாற்றினேன். இத்தனை பேரின் பாதுகாப்புக்கும் நான் பொறுப்பு என்று நினைக்கையில் என் மனம் படபடத்தது,” என்றார் கேப்டன் தினேஷ்.

“தினந்தோறும் நாங்கள் செய்யும் பயிற்சி இந்தச் சம்பவத் தைக் கையாள நன்கு உதவியது. மேலும் இந்த அனுபவத்தைக் கொண்டு மற்ற அதிகாரிகளுடன் பெரிய தீச்சம்பவங்களைக் கையாள்வது குறித்த அனுபவத் தைப் பகிர்ந்து பயன்பெறலாம்,” என்று அவர் குறிப்பிட்டார்.

தீயை அணைக்க ஏறக்குறைய ஆறு மணி நேரம் ஆனது. ‘எல்பிஜி’ எரிவாயு தொடர்பான ஆகப் பெரிய தீயணைப்பு முயற்சி இது என சிங்கப்பூர் குடிமைத் தற் காப்புப் படை தெரிவித்துள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை ஜாலான் புரோவில் ஏற்பட்ட பயங் கர தீச்சம்பவத்தைக் கையாண்ட அனுபவத்தை நேற்று செய்தியாளர் களிடம் பகிர்ந்துகொண்டனர் அப்பணியில் ஈடுபட்ட தீயணைப் பாளர்களில் சிலர்.

படையின் நான்காம் பிரிவைச் சேர்ந்த ஐந்து தீயணைப்பு நிலையத் தளபதிகளும் சம்பவ இடத்தில் இருந்து தீயணைக்கவும் சிக்கியி ருந்தோரை மீட்கவும் முயற்சிகள் எடுத்துள்ளனர்.

சம்பவ இடத்தில் முக்கிய பிரி வின் ஒருங்கிணைப்புத் தலைவரா கச் செயல்பட்டார் 37 வயது மேஜர் நவின் பாலகிருஸ்ணன். இவர் புக்கிட் பாத்தோக் தீயணைப்பு நிலையத்தின் தளபதி.

தீயின் வீரியத்தையும் உண்மை நிலவரத்தையும் கண்டறிய கொழுந்துவிட்டு எரிந்துகொண்டி ருந்த வளாகத்தினுள் தனியே நடந்து சென்றார் மேஜர் நவின்.

“தீ கொழுந்துவிட்டு எரிந்த இடத்திற்கு நான் முதலில் சென்று சம்பவத்தின் நிலைமையை ஆராய்ந்தேன். நிலைமை பாதுகாப் பாக இருக்கிறதா என்பதை உறு திப்படுத்திய பின்னரே தீயணைப்பு வீரர்களை உள்ளே அனுப்பினேன்,” என்றார் மேஜர் நவின்.

உடலையும் மனதையும் சோர் வுறச் செய்த மாபெரும் தீயணைப்பு முயற்சியில் ஈடுபட்டு, கடமையைச் சரிவர செய்து முடித்து, பாதுகாப் பாக அனைவரும் வெளியேறியது அனைவருக்கும் மனமகிழ்ச்சியைத் தந்தது என்றார் அவர்.

“சகோதரத்துவத்தை நாங்கள் அனைவரும் நேரில் கண்டோம். ஒற்றுமையுடன் பணியாற்றி ஒருவருக்கொருவர் தட்டிக்கொடுத்துக்கொண்டோம்,” என்று அவர் நெகிழ்ச்சியுடன் சொன்னார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!