ஜி20 உச்சநிலைக் கூட்டம்: ஒசாகாவில் பிரதமர் லீக்கு வரவேற்பு

ஜி20 உச்சநிலைக் கூட்டம்: ஒசாகாவில் பிரதமர் லீக்கு வரவேற்பு

1 mins read
e32475fc-d4a7-4fa7-addf-4e76919835ba
பிரதமர் லீ சியன் லூங்கை ஒசாகா விமான நிலையத்தில் ஜப்பானிய பிரதமர் அபே (வலது) வரவேற்றார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்  -

பிரதமர் லீ சியன் லூங், ஞாயிற்றுக்கிழமை வரை ஜப்பான் பயணம் மேற்கொண்டு இருக் கிறார். ஜப்பானிய பிரதமர் அழைப்பை ஏற்று அவர் ஜி20 தலைவர்கள் உச்சநிலை மாநாட்டில் கலந்துகொள்வார்.

அந்த மாநாட்டின் விவாதிப்புகளில் பங் கெடுத்துக்கொள்ளும் திரு லீ, மாநாட்டை யொட்டி இதர நாடுகளின் தலைவர்களுடன் இருதரப்பு சந்திப்புகளை நடத்துவார் என்று பிரதமர் அலுவலகம் நேற்று தெரிவித்தது.

பிரதமருடன் துணைப் பிரதமரும் நிதி அமைச்சருமான ஹெங் சுவீ கியட், வெளி யுறவு அமைச்சர் டாக்டர் விவியன் பால கிருஷ்ணன், மூத்த அதிகாரிகள், பிரதமர் அலுவலக அதிகாரிகள், சிங்கப்பூர் நாணய ஆணைய அதிகாரிகள் ஆகியோரும் ஜப்பான் சென்று இருக்கிறார்கள்.

மூத்த அமைச்சரும் தேசிய பாதுகாப்பு ஒருங்கிணைப்பு அமைச்சருமான டியோ சீ ஹியன், பிரதமர் லீ நாடு திரும்பும் வரை தற்காலிகப் பிரதமராகச் செயல்படுவார் என்று பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டின் ஜி20 உச்சநிலை மாநாடு ஜப்பானின் இரண்டாவது ஆகப் பெரிய நகரான ஒசாகாவில் இன்று வெள்ளிக்கிழமை தொடங்குகிறது.