மும்பையில் கனமழை; குறைந்தது 20 பேர் மரணம்

இந்தியாவின் மும்பை நகரில் இரண்டாவது நாளாகத் தொடர்ந்து பெய்த கனமழையால் குறைந்தது 20 பேர் உயிரிழந்தனர். வாகனப் போக்குவரத்து, ரயில் சேவை உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகள் பாதிக்கப்பட்ட நிலையில் வேலையிடங்களும் பள்ளிகளும் வேறு வழியின்றி விடுப்புகளை அறிவித்துள்ளன.

மழையால் 69 பேர் காயமடைந்தனர்.  அனைத்துலக நிதித்துறை மையமாகத் தன்னை உருமாற்றிக்கொள்ள ஆசைப்படும் மும்பையின் உள்ளமைப்பு, கனமான மழையைச் சமாளிக்க இயலாமல் திணறுகிறது. 

மலட் என்ற பகுதியில் கனமழை சுவர் ஒன்றை இடித்துத் தள்ளியதாக அவ்வட்டாரத்தின் தீயணைப்பு அதிகாரிகள் தெரிவித்தனர். “மீட்புப் பணிகள் தொடர்ந்தவண்ணம் உள்ளன. அவசரச் சேவைத்துறை அதிகாரிகள் பாதிக்கப்பட்ட இடங்களுக்குச் சென்று பொதுமக்களுக்கு உதவி செய்து வருகின்றனர். மேல் விவரங்களுக்காக நாங்கள் காத்திருக்கிறோம்,” என்று அந்த அதிகாரிகளில் ஒருவர் தெரிவித்தார். 

கடந்த 24 மணி நேரமாக 300 மில்லிலீட்டர் மழை சில இடங்களில் பெய்தது. இதனால் முழு வீதிகள் அடைக்கப்பட்டிருந்தன. 

மும்பையின் அனைத்துலக விமான நிலையத்திலும் விமானப் பயணங்கள் தாமதமாயின.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

காணும் இடமெல்லாம் குடையாகக் காட்சியளித்த ஆர்ப்பாட்ட ஊர்வலம். படம்: ராய்ட்டர்ஸ்

18 Aug 2019

ஹாங்காங்கில் போட்டி ஆர்ப்பாட்டங்கள்; ஆசிரியர்களும் போராட்டத்தில் குதித்தனர்

‘பிக் & கோ’ தானியங்கி சில்லறை வர்த்தகக் கடையில் வாடிக்கையாளர்களைக் கண்காணிக்க செயற்கை நுண்ணறிவு பயன்படுத்தப்படுவதை அமைச்சர் சான் சுன் சிங்குக்கு (வலது) அந்த நிறுவனத்தின் இயக்குநர் அலெக்ஸ் இங் விளக்கினார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

17 Aug 2019

தானியங்கி சில்லறை விற்பனைக் கடைகள்

திருமதி புவா ஜியோக்கின் சடலம் இன்று காலை அவரது மகனால் உறுதிசெய்யப்பட்டது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

15 Aug 2019

துடுப்பு விபத்து: பெண்ணின் சடலம் உறுதி செய்யப்பட்டது