உடைசல் கிடங்கில் தீ; ஒருவர் காயம்

ஜாலான் புரோவிலுள்ள உடைசல் கிடங்கில்  ஏற்பட்ட தீச்சம்பவத்தில்  ஒருவர் காயமடைந்துள்ளார். 

தீச்சம்பவம் பற்றி நேற்றிரவு 8 மணி வாக்கில் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. இரவு சுமார் 9.15 மணிக்குள் அந்தத் தீ  அணைக்கப்பட்டது.  தீக்காயங்கள் பட்ட ஒருவர் சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

குடிமைத் தற்காப்புப் படை இந்தச் சம்பவத்தின் காரணத்தை ஆராய்ந்து வருகிறது. சம்பவ இடத்தில் எரிந்த தீயிலிருந்து கரும்புகை கிளம்பி வானத்தை நிரப்புவதைச் சமூக ஊடகத்தில் பதிவேற்றப்பட்ட படங்களும் காணொளிகளும் காட்டுகின்றன. 

 

இப்பகுதியில் மேலும் செய்திகள்

சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தில் நடந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்று மாணவர்களுடன் கலந்துரையாடிய சட்ட, உள்துறை அமைச்சர் சண்முகம். இந்த நிகழ்ச்சியை வழிநடத்தினார் அப்பல்கலைக்கழகத்தின் லீ குவான் இயூ பொதுக் கொள்கை ஆய்வுப் பள்ளியினுடைய கொள்கை ஆய்வுக் கழகத்தின் மூத்த ஆய்வாளரான டாக்டர் சித்ரா ராஜாராம். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

23 Aug 2019

‘அக்கறைக்குரியதாக நீடிக்கும் இனவாதம்’