மழையால் ஆட்டம் நிறைவு அடையவில்லை

இந்தியாவும் நியூசிலாந்தும் மோதும் உலகக் கிண்ண கிரிக்கெட் அரையிறுதியில்  நியூசிலாந்து அணி  இதுவரை 5 விக்கெட்டுக்கு 211 ஓட்டங்கள் (46.1 ஓவர்) எடுத்துள்ளது. இங்கிலாந்தின் மன்செஸ்டர் நகரில் நேற்று மாலை நிகழ்ந்த அந்த ஆட்டத்தின்போது பெய்த மழையால் அந்த ஆட்டம் இன்று தொடரும்.

பூவா தலையாவில் வென்ற நியூசிலாந்து அணித்தலைவர் வில்லியம்சன் முதலில் மட்டையடிப்பதாக முடிவு செய்தார். இதன்படி, நியூசிலாந்து அணியைச் சேர்ந்த மார்ட்டின் கப்திலும் ஹென்றி நிகோல்சும் ஆட்டத்தைத் தொடங்கினர். 

மழையில் நின்று இந்திய அணியை ஆதரிக்கும் ரசிகர்கள்.(படம்: ஏஎஃப்பி)
மழையில் நின்று இந்திய அணியை ஆதரிக்கும் ரசிகர்கள்.(படம்: ஏஎஃப்பி)

இன்னிங்சின் 17ஆவது பந்து வரை நியூசிலாந்து எந்த ஓட்டத்தையும் எடுக்கவில்லை.  14ஆவது ஓவருக்குப் பிறகு நியூசிலாந்து விளையாட்டாளர்களை இந்திய விளையாட்டாளர்கள் வெகுவாகக் கட்டுப்படுத்தினர்.

இந்த ஆட்டம் எவ்வளவு விரைவில் முடியுமோ அந்த அளவுக்கு நியூசிலாந்திற்குச் சாதமாக இருக்கும் என்பது சிலரின் ஊகம். ஆயினும்,  புள்ளிகளின் அடிப்படையில் இந்தியாவுக்குச் செல்லும் வாய்ப்புகளும் அதிகமாகும் என்றும் வேறு சிலர் கூறுகின்றனர்.

 

இப்பகுதியில் மேலும் செய்திகள்

மாநாட்டிற்கு வந்திருந்தோரிடம் உரையாடினார் மூத்த அமைச்சர் டியோ சீ ஹியன். நடுவில் தெற்காசிய ஆய்வுக் கழகத் தலைவர் கோபிநாத் பிள்ளை. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

17 Nov 2019

புலம்பெயர் சமூகத்துக்கு மூன்று யோசனைகள்

(இடமிருந்து) தெற்காசிய ஆய்வுக் கழகத்தின் தலைவர்
கோபிநாத் பிள்ளை, மூத்த அமைச்சர் தர்மன் சண்முகரத்னம்,
திரு ஜே.ஒய். பிள்ளை, திரு மன்சூர் ஹசான், என்யுஎஸ் தலைவர் டான் எங் சாய். படம்: தெற்காசிய ஆய்வுக் கழகம்

17 Nov 2019

ஜே.ஒய். பிள்ளைக்கு சிறப்புமிக்க வாழ்நாள் சாதனையாளர் விருது

முதல் தளத்திலிருந்து, பிரிக்கும் பலகை வழியாக ‘கீழ்த்தளம் ஒன்றில் (Basement 1)’ அவர் விழுந்ததாக மனிதவள அமைச்சு குறிப்பிட்டது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் வாசகர்

16 Nov 2019

ஷா பிளாசா: வேலையிடத்தில் தவறி விழுந்து இந்திய ஊழியர் மரணம்