கிரிக்கெட் : இறுதிச் சுற்றில் நியூசிலாந்து யாரைச் சந்திக்கும்?

உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து 18 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வென்று இந்திய அணியை வருத்தத்தில் ஆழ்த்தியது. 

இதற்கு முன்னர் புள்ளிப்பட்டியலில் ஒன்றாம் இடத்தில் இருந்த இந்தியா, நான்காம் நிலையில் அப்போது இருந்த நியூசிலாந்தை நேற்று முன்தினம் சந்தித்தது. பூவா தலையாவில் வென்ற நியூசிலாந்து, முதலில் மட்டையடிக்க முடிவு செய்தது. நியூசிலாந்து அணி 46.1 ஓவரில் ஐந்து விக்கெட்டுக்கு 211 ஓட்டங்களை எடுத்த பின்னர் மழையின் காரணமாக ஆட்டம் நிறுத்தப்பட்டது.

பின்னர் நேற்று ஆட்டம் தொடர்ந்தது. இந்திய அணி 49.3 ஓவரில் 221 ஓட்டங்களைப் பெற்றது. 239 ஓட்டங்களைப் பெற்ற நியூசிலாந்து இறுதிக்குள் செல்கிறது.

 

வருத்தத்தில் வாடியிருக்கும் இந்திய ரசிகர்களின் முகங்கள். (படம்: ஏஎஃப்பி)
வருத்தத்தில் வாடியிருக்கும் இந்திய ரசிகர்களின் முகங்கள். (படம்: ஏஎஃப்பி)

நியூசிலாந்து அணியை எதிர்த்து போட்டியிடப்போவது ஆஸ்திரேலியாவா அல்லது இங்கிலாந்தா என்பது இன்று (ஜூலை 11) சிங்கப்பூர் நேரப்படி மாலை 5.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் தெரிய வரும்.