(காணொளி): நகைக்கடை திருட்டு; சம்பவ இடத்தில் சந்தேக நபர்

புளோக் 574 அங் மோ கியோ அவென்யூ 5லுள்ள நகைக் கடை ஒன்றிலிருந்து 100,000 வெள்ளி பெறுமானமுள்ள ஆபரணங்களைத் திருடியதாகச் சந்தேகிக்கப்படும் மூன்று ஆடவர்களில் ஒருவர், விசாரணை நிமித்தமாக அதே கடைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார்.

27 வயதுக்கும் 31 வயதுக்கும் இடைப்பட்ட அம்மூவர் திருடிய நகைகள் அனைத்தும் மீட்கப்பட்டதாக போலிசார் கடந்த வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 16ஆம் தேதி) தெரிவித்தனர்.

எம். ஜெகதீஷ் என்ற சந்தேக நபரை விசாரணை அதிகாரி ஒருவர் இன்று சம்பவ இடமான ‘ஹொக் சியோங் ஜேட் என்ட் ஜுவல்லரி’ கடைக்கு அழைத்து சென்றார். ஜெகதீஷ் சிவப்பு நிற சட்டை அணிந்திருப்பதாக தமிழ் முரசு நிருபர் வைதேகி ஆறுமுகம் எடுத்த காணொளி காட்டுகிறது.

தற்போது மத்திய போலிஸ் பிரிவின் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள ஜெகதீஷ் வரும் வெள்ளிக்கிழமை நீதிமன்றத்தில் மீண்டும் முன்னிலையாகவேண்டும்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

ஓவியரின் கைவண்ணத்தில் ‘செந்தோசா சென்சரிஸ்கேப்’. 37 மீட்டர் உயர செந்தோசா மெர்லயனைக் கண்டு ரசிக்க வரும் அக்டோபர் 20ஆம் தேதியே கடைசி நாள். படங்கள்: செந்தோசா டெவலப்மென்ட் கார்ப்பரேஷன், ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

21 Sep 2019

விடைபெறும் செந்தோசா மெர்லயன்

அங் மோ கியோவிலுள்ள புளோக் 224ல் தனிநபர் நடமாட்டச் சாதனம் ஒன்றுக்கு மின்னேற்றம் செய்யப்படும் வேளையில் அது திடீரென தீப்பிழம்பாக வெடித்து அந்த வீட்டையே எரியச் செய்தது. (படம் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்)

20 Sep 2019

பாதுகாப்புத் தரநிலைகளைப் பூர்த்திசெய்யாத மின்ஸ்கூட்டர்களைத் திருப்பிக் கொடுப்போருக்கு $100 சன்மானம்

வெள்ளிக்கிழமை செப்டம்பர் 20ஆம் தேதி காலை 9 மணி அளவில் எடுக்கப்பட்ட படம். (படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்)

20 Sep 2019

வெள்ளிக்கிழமை காலை காற்றுத்தரம் மேம்பட்டது