சிங்கப்பூருக்குத் தங்கம் வென்ற வீராங்கனை

லண்டன்: லண்டனில் நடைபெற்ற உலக உடற்குறையுள்ளோர் நீச்சல் போட்டியில் தேசிய வீராங்கனை யிப் பின் சியூ தங்கம் வென்றுள்ளார். பெண்களுக்கான 100 மீட்டர் மல்லாக்க நீச்சலில் அவர் முதலிடம் பிடித்தார். இரண்டாவது இடத்தை கனடாவின் அலி வேன் விக் ஸ்மார்ட்டும் மூன்றாவது இடத்தை இத்தாலியின் ஏஞ்சலா பிரோசிடாவும் பிடித்தனர்.

2010ஆம் ஆண்டில் நெதர்லாந்தின் ஐன்ட்ஹோவன் நகரில் நடைபெற்ற உலக நீச்சல் போட்டியில் பெண்களுக்கான 50 மீட்டர் எதேச்சைப்பாணி நீச்சல் போட்டியில் யிப் தங்கம் வென்றார். அதே ஆண்டில் 50 மீட்டர் மல்லாக்க நீச்சலில் அவர் வெள்ளிப் பதக்கம் வென்றார்.

(நன்றி: மார்க் மொர்ரிஸ்/ ஸ்போர்ட் நியூஸ் ஏஜன்ஸி)
(நன்றி: மார்க் மொர்ரிஸ்/ ஸ்போர்ட் நியூஸ் ஏஜன்ஸி)

2013ஆம் ஆண்டு கனடாவில் நடைபெற்ற போட்டியில் 50 மீட்டர் மல்லாக்க நீச்சல் போட்டியிலும் யிப் வெள்ளி வென்றார்.
ஒன்பது ஆண்டுகள் கழித்து, தற்போது மீண்டும் உலக நீச்சல் போட்டியில் தங்கம் வென்ற பெருமை அவரைச் சேரும்.
“உலக வெற்றியாளர் பட்டத்தை வென்றிருப்பது மகிழ்ச்சியைத் தருகிறது. நான் 15 ஆண்டுகளாக நீச்சல் போட்டிகளில் ஈடுபட்டு வருகிறேன். ஆனால் இந்த வெற்றி சிறப்பிடம் பெறுகிறது.

“எனது அயராத உழைப்புக்கு எனக்குக் கிடைத்த அங்கீகாரமாக நான் இதைக் கருதுகிறேன்,” என்று நியமன நாடாளுமன்ற உறுப்பினருமான யிப் கூறினார். யிப்பிற்குத் தசை தொடர்பான குறைபாடு உள்ளது குறிப் பிடத்தக்கது.
 

இப்பகுதியில் மேலும் செய்திகள்

ஓவியரின் கைவண்ணத்தில் ‘செந்தோசா சென்சரிஸ்கேப்’. 37 மீட்டர் உயர செந்தோசா மெர்லயனைக் கண்டு ரசிக்க வரும் அக்டோபர் 20ஆம் தேதியே கடைசி நாள். படங்கள்: செந்தோசா டெவலப்மென்ட் கார்ப்பரேஷன், ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

21 Sep 2019

விடைபெறும் செந்தோசா மெர்லயன்

அங் மோ கியோவிலுள்ள புளோக் 224ல் தனிநபர் நடமாட்டச் சாதனம் ஒன்றுக்கு மின்னேற்றம் செய்யப்படும் வேளையில் அது திடீரென தீப்பிழம்பாக வெடித்து அந்த வீட்டையே எரியச் செய்தது. (படம் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்)

20 Sep 2019

பாதுகாப்புத் தரநிலைகளைப் பூர்த்திசெய்யாத மின்ஸ்கூட்டர்களைத் திருப்பிக் கொடுப்போருக்கு $100 சன்மானம்

வெள்ளிக்கிழமை செப்டம்பர் 20ஆம் தேதி காலை 9 மணி அளவில் எடுக்கப்பட்ட படம். (படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்)

20 Sep 2019

வெள்ளிக்கிழமை காலை காற்றுத்தரம் மேம்பட்டது