உலகை இன்னும் ஒளிமயமானதாக ஆக்குவோம்

என்னுடைய மாதாந்திர கட்டுரையில் அர சாங்கக் கொள்கைகள், முக்கியமான விவகாரங்கள் பற்றியே பொதுவாக நான் எழுதுவேன். ஆனால் இன்று திரு சா.கோவிந்தன் (படம்) என்ற மிகவும் சிறப்புமிக்க ஒருவரைப் பற்றி கருத்துரைக்க விரும்புகிறேன்.

திரு கோவிந்தன் பொதுக் கல்விச் சான்றிதழ் வழக்கநிலை (என்) வரைதான் படித்தவர். சிங்கப்பூர் பவர் நிறுவனத்தில் சாதனக் கட்டுப்பாட்டு ஊழியராக பணி ற்றி ஓய்வுபெற்றவர்.

ஓய்வுபெற்ற பிறகு மூன்று ஆண்டுகள் கழித்து சுறுசுறுப்பாக இருக்கவேண்டும் என்று முடிவு செய்த அவர், மறுபடியும் மாற்றுப் பாதுகாவல் அதிகாரிக சேர்ந்து 12 மணி நேர வேலை பார்த்தார்.

எளிமைன பின்னணி என்றாலும் தனது 80வது வயதில் திரு கோவிந்தன் சிண்டா, சிங்கப்பூர் சிறார் சங்கம், நாராயண மிஷன், சிங்கப்பூர் தமிழர் இயக்கம் உள்ளிட்ட பல அறப்பணி அமைப்பு

களுக்கு $80,000 நன்கொடை வழங்கினார்.

மாற்றுப் பாதுகாவல் அதிகாரின ஒருவர் எப்படி இவ்வாறு செய்ய முடிந்

தது?

இரண்டு அம்சங்கள் அவரை உந்தித்தள்ளின. மற்றவர்களுக்கு உதவ வேண்

டும் என்பது ஒன்று. தன் சக்திக்கு உட்பட்ட வரை செய்ய முடிந்த நன்மைகளைச் செய்ய வேண்டும் என்ற எண்ணம் மற்றொன்று.

தன் சொந்தப் பணத்தை எப்படி திறம்பட செலவழிப்பது என்பதிலும், செலவு செய்வது, சேமிப்பதிலும் திரு கோவிந்தன் கெட்டிக்காரர்.

வீட்டில் அன்றாட வேலைகளை எல்லாம் அவரே செய்துவிடுவார். சலவை இயந்திரத்தை அவர் பயன்படுத்தியதே கிடைது. வெளியில் சாப்பிடுவதும் அரிது. பொதுப் போக்குவரத்தில்தான் போய் வருவார்.

ஆண்டாண்டு காலமாக ஜூரோங் சமூகத்தில் முக்கியமான பணிற்றி

னார்.

திரு கோவிந்தன் அடித்தள அமைப்புகளுக்கான கணக்குத் தணிக்கைளராகத் தொடங்கி செயலாளராகி கடைசியில் துணைத் தலைவராகவும் உயர்ந்து தாம் ஆற்றிய சேவைக்காக ஏராளமான விருதுகளைப் பெற்றார்.

வலுவான நன்னெறிகள், விவேகம், அறிவார்ந்த முதலீட்டு முடிவுகள் காரணமாக அவர் தமக்குக் கிடைத்த லாப ஈவுகளைக் கொண்டு அறப்பணிக்கும் உதவி தேவைப்படுவோருக்கும் உதவ முடிந்தது.

இடைவிடா மல் $1 கொடுத்தாலே பெரும் பலன் இருக்கும் என்பது இவரின் நம்பிக்கை.

சிண்டா நன்கொடைளர்களைப் பாராட்டி சிறப்பிக்க சில ஆண்டுகளுக்கு முன் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அவரைச் சந்திக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.

அமைதிக, அதேநேரத்தில் கண்ணியம் மிக்கவராக, அடக்கமாக அவர் காணப்பட்டார். இது என்னை மிகவும் கவர்ந்தது.

சில வார்த்தைதான் பேசுவார். ஆனாலும் மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்ற அசைக்க முடித தமது விருப்பத்தை அவர் தம் செய்கைகள் மூலம் வெளிப்படுத்தி இருக்கிறார்.

அவர் காலமாகிவிட்ட செய்தியை அண்மையில் அறிந்ததும் அவருடைய வாழ்க்கையில் இருந்து நாம் பலவற்றையும் கற்றுக்கொள்ள முடியும் என்பதை கொஞ்ச நேரம் அமைதியாக யோசித்துப் பார்த்தேன்.

உங்கள் சூழ்நிலை எப்படி இருந்தாலும், நீங்கள் எவ்வளவு எளிமையனவராக இருந்தாலும் நீங்கள் உதவ முடியும். பெரும் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்பதைத்தான் திரு கோவிந்தன் எனக்குப் புரியவைத்தார்.

ஓர் எளிய உதவி ஏராள பலனை உருவாக்கும். அதனால் ஏற்படக்கூடிய பலா பலன் எதிர்காலத்திலும் தொடரும். திரு கோவிந்தன் உணர்த்திச் சென்று இருக்கும் உண்மைன குணநலன் கருணை. தம்முடைய பெருந்தன்மை மிக்க செயல்கள் மூலம் அவர் மற்றவர்களையும் நற்பணிகளைச் செய்யத் தூண்டியிருக்கிறார்.

வலுவான சமுக உணர்வோடு, ஒருவர் மற்றவர்களுக்கு உதவும் எண்ணத்தோடு, அதே வேளையில் விவேகம், கட்டொழுங்கோடு மக்கள் வாழக்கூடிய ஒரு சமூகத்தை உருவாக்க நாம் விழைகிறோம். நாம் உருவாக்க விழையும் அத்தகைய சமூகத்துக்கு திரு கோவிந்தன் ஓர் எடுத்துக்காட்டு.

பல வழிகளில் பல விதத்தில் உதவலாம். பணமாக, நேரமாக, முயற்சியாக எப்படியும் இருக்கலாம். உதவுவது என்பது இரண்டு வழிகளில் நன்மை பயக்கும். அதனால் பெறுபவருக்கும் கொடுப்பவருக்கும் பலன் உண்டு.

உதவுதல் என்பது அதிக பரிவு, பொறுப்பு, குடிமை உணர்வை உண்டு பண்ணுகிறது.

நாம் கொஞ்ச காலமாக கொடைத் தன்மையையும் தொண்டூழியத்தையும் ஊக்குவித்து வருகிறோம். பொருளியல் சாதனைகளை மட்டும் வைத்து சமூகங்கள் மதிப்பிடப்படுவதில்லை.

தங்களிடையே இருக்கும் பலவீனமான, பரம ஏழ்மையான, வசதி குறைந்த மக்களை குடிமக்கள் எப்படி கைளுகிறார்கள் என்பதை வைத்தே சமூகங்கள் சீர்துக்கிப் பார்க்கப்படுகின்றன.

இதைச் சாதிப்பது அரசாங்கத்தின் பணி மட்டும் அல்ல. சமூகம் முழுமையாக இதை எப்படிக் கைளுகிறது என்பதைப் பொறுத்தே இது அமையும். திரு கோவிந்தனைப் போலவே நாம் எல்லாரும் செயல்படமுடியும் என்றால் உண்மையிலேயே உலகம் இன்னும் ஒளிமயமானதாக இருக்கும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!