துணையமைச்சருக்கு வழிகாட்டும் முன்னாள் பிரதமர்களின் வார்த்தைகள்

காலஞ்சென்ற மதியுரை அமைச்சர் லீ குவான் இயூ, முன்னாள் மூத்த அமைச்சர் கோ சோக் டோங் தங்களது 2011ஆம் ஆண்டில் தங்களது பதவிகளைவிட்டு வெளியேறியபோது “இளைய தலைமுறையினர் எப்போதும் மூத்த தலைமுறையினரின் நலனைப் பற்றி யோசிக்கவேண்டும்,” என்று தங்களுக்கு அடுத்து பதவியில் வந்தவர்களுக்கு நினைவுபடுத்தியதாக துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட் தெரிவித்திருக்கிறார். இந்த வார்த்தைகள் தனக்குள் பதிந்திருந்ததாகவும் தனது வேலையில் தொடர்ந்து வழிகாட்டுவதாகவும் அதே 2011ஆம் ஆண்டில் அரசியலுக்கு அறிமுகமான திரு ஹெங் கூறுகிறார்.

முதியோருக்கான திட்டங்களை ஆதரிக்கும் மக்கள் செயல் கட்சிக்கான மூத்தோர் குழு ஏற்பாடு செய்திருந்த முதியோர் அனைத்துலக தின நிகழ்ச்சியில் திரு ஹெங் உரையாற்றியபோது இவ்வாறு கூறினார்.

சிங்கப்பூரர்களில் 15 விழுக்காட்டினர் (அதாவது 500,000 சிங்கப்பூரர்கள்) 65 வயதுக்கும் அதிக வயதுடையவர்களாக இருக்கும் வேளையில் மக்கள் செயல் கட்சியின் முதல் துணைத் தலைமை செயலாளருமாக உள்ள திரு ஹெங்கின் கருத்துகள் வெளிவந்துள்ளன.

மூத்தோரின் பல்வேறு குறிக்கோள்களை ஆதரிக்க அரசாங்கம் விரும்புவதாகக் குறிப்பிட்ட திரு ஹெங், அவர்களது தேவைகளை நிறைவு செய்ய தலைவர்கள் வெவ்வேறு கருத்துகளைக் கேட்டு கொள்கைகளை உரிய விதத்தில் மாற்றுவர் எனத் தெரிவித்தார். குறிப்பாக, அவரும் அவரது சகாக்களும் பிஏபி.எஸ்ஜியின் பணிகளை உன்னிப்பாக கவனித்து வந்தனர். அந்த அமைப்பு 2013ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது.

ஆறு மாதங்களாக நீடித்த ஆலோசனைக்குப் பிறகு ஜனவரியில் கொள்கைகள் தொடர்பான பத்திரம் ஒன்று சமர்ப்பிக்கப்பட்டது. அவற்றிலுள்ள பல்வேறு பரிந்துரைகள் அரசின் கொள்கைகளாக மாறியுள்ளதாகத் திரு ஹெங் கூறினார்.

உதாரணத்திற்கு, 55 வயதைத் தாண்டிய ஊழியர்களின் மத்திய சேமநிதி பங்களிப்பு விகிதங்களை உயர்த்தும் யோசனை இவ்வாண்டின் தேசிய தின பேரணி உரையின்போது அறிவிப்பாக வெளிவந்தது.

சிங்கப்பூரின் நான்காவது தலைமுறையினர் மேம்படவும் கொள்கைகளை மேலும் சிறப்பாக எடுத்துரைக்கவும் இந்தக் குழுவால் திரட்டப்படும் கருத்துகள் பெரிதும் கைகொடுக்கும் என்று திரு ஹெங் தெரிவித்தார்.

மக்களுடன் தொடர்ந்து அணுக்கமாக இணைந்திருக்கவும் அவர் அந்தக் குழுவை ஊக்குவித்தார்.

ஹோட்டல் மிராமர் சிங்கப்பூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் ஓய்வுபெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட சுமார் 420 விருந்தாளிகள் பங்கேற்றனர்.

“மக்களுடன் அணுக்கமாக இருந்து அவர்களுடன் செயல்படும் இந்த அணுகுமுறை மக்கள் செயல் கட்சி ஆர்வலர்களிடைய தலைமுறை தலைமுறையாக தழைக்கவேண்டும்,” என்று திரு ஹெங் தெரிவித்தார்.

முதியவர்கள் தங்களது இறுதிக் காலத்திலும் நிம்மதியுடன் இருக்கவும் வேண்டிய பராமரிப்பைப் பெறவும் அரசாங்கம் தன் பங்கைத் தொடர்ந்து செய்யும் என்றும் அவர் கூறினார். மூத்தோருக்காகக் குரல்கொடுத்து அவர்களது ஈடுபாட்டைத் தொடர்ந்து வலுப்படுத்துவதன் மூலம் மூத்தோர் குழு பங்காற்றலாம் என்றார் திரு ஹெங்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!