விடுதலைப் புலிகள் விவகாரத்தில் அரசின் தலையீடு இல்லை: மகாதீர்

தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புகொண்டதற்காக எடுக்கப்பட்ட கைது நடவடிக்கை சட்டத்திற்கிணங்க மேற்கொள்ளப்பட்டது என்று மலேசிய பிரதமர் மகாதீர் முகம்மது தெரிவித்துள்ளார். எல்டிடிஇ இயக்கத்தை உயிர்ப்பிக்கவும் அதற்கு நிதி திரட்டவும் ஆதரவு தெரிவித்த சந்தேகத்தின் பேரில் வெவ்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 12 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

ஆட்சியாளர்களின் தலையீடு இன்றி போலிஸ் மட்டுமே மேற்கொண்ட நடவடிக்கை இது என்று கூறிய டாக்டர் மகாதீர் எந்தவொரு கட்சியையும் பலவீனப்

படுத்த இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அர்த்தமாகாது என்று நேற்று விளக்கினார்.

கடந்த வியாழக்கிழமை முதற்கட்ட நடவடிக்கையில் சிக்கிய எழுவரில் இருவர் ஜனநாயக செயல் கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் என்பதால் அக்கட்சியினருக்கும் போலிசுக்கும் இடையிலான பதற்றம் அதிகரித்து வரும் நிலையில் டாக்டர் மகாதீர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டதற்கு மறுநாளான வெள்ளிக்கிழமை நடைபெற்ற வாராந்திர அமைச்சரவைக் கூட்டத்தில் இவ்விவகாரம் விவாதிக்கப்பட்டதாக சில தகவல்கள் கூறின.

2012ல் கொண்டுவரப்பட்ட சோஸ்மா சட்டத்தை பக்கத்தான் ஹரப்பான் அரசாங்கம் நீக்கப்போவதாக உறுதி அளித்த பின்னரும் இந்த கைது நடவடிக்கைக்கு சோஸ்மா பயன்படுத்தப்பட்டதாக அமைச்சரவைக் கூட்டத்தில் ஜனநாயக செயல் கட்சி அமைச்சர்கள் குரல் எழுப்பியதாகவும் அத்தகவல்கள் குறிப்பிட்டன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!