லிட்டில் இந்தியாவிலும் பாதுகாப்பான இடைவெளி; மக்களின் ஒத்துழைப்பு அவசியம்

கொவிட்-19 கிருமித்தொற்றைக் கட்டுப்படுத்தும் நோக்கில் அரசாங்கம் அறிவித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை லிட்டில் இந்தியாவிலுள்ள வர்த்தகர்கள் பின்பற்றி வருவதைக் காண முடிகிறது. எனினும், மக்களிடையே அதைப் பற்றிய விழிப்புநிலை இன்னும் அதிகமாக இல்லை.

பெரும்பாலான கடைகளில் ஒரு மீட்டர் இடைவெளியில் ஒட்டுவில்லைகள் ஒட்டப்பட்டுள்ளன. வாடிக்கையாளர்கள் பாதுகாப்பான இடைவெளியில் நிற்பதற்கு அவை வகைசெய்யும் என்று கடைக்காரர்கள் நம்புகின்றனர்.

“இந்த ஏற்பாட்டிற்கு ஓர் அரசாங்க அமைப்பைச் சேர்ந்த அதிகாரிகள் உதவினர். மக்களுக்குத் தகவலைக் கொண்டு சேர்க்க சுவரொட்டிகளையும் அவர்கள் வழங்கியுள்ளனர்,” என்றார் கடந்த 12 ஆண்டுகளாக லிட்டில் இந்தியாவில் கடை நடத்திவரும் திரு சுபைர்.

டன்லப் ஸ்திரீட், மினோரா ஜுவல்ஸ் நகைக்கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் அனைவரின் உடல் வெப்பநிலையும் பரிசோதிக்கப்பட்டு பதிவு செய்யப்படுகிறது; அவர்களின் தொடர்பு எண்களும் பெறப்பட்டு பதிவுசெய்யப்படுகின்றன.

பல கடைகளிலும் ஊழியர்கள், வாடிக்கையாளர்கள் என அனைவரும் ‘பாதுகாப்பான இடைவெளி’ விதிமுறையைப் பின்பற்றும்படி அறிவுறுத்தப்படுகின்றனர்.

லிட்டில் இந்தியாவிலுள்ள உணவகங்களில் ஓர் இருக்கைக்கும் அடுத்த இருக்கைக்கும் இடைவெளி அதிகப்படுத்தப்பட்டுள்ளது. நகர்த்தமுடியாத மேசை, நாற்காலி இருக்கும் பட்சத்தில் இடையிடையே மேசைகளிலும் இருக்கைகளிலும் ‘இங்கு அமரவேண்டாம்’ எனக் குறிப்பிடும் விதமாக ஒட்டுவில்லைகள் ஒட்டப்பட்டுள்ளன.

தேக்கா சந்தை உணவங்காடி நிலையத்தில், அமரக்கூடாத இருக்கைகள் மீது நீல நிற ஒட்டுபட்டைகள் ஒட்டப்பட்டுள்ளன.

“செவ்வாய்க்கிழமையே அதிகாரிகள் இந்த ஒட்டுவில்லைகளை ஒட்டிவிட்டுச் சென்றனர். ஆனால், மக்கள் அதைப் பொதுவாக கண்டுகொள்வதாகத் தெரியவில்லை,” என்றார் தேக்கா சந்தை, ‘பாரம்பரிய செட்டிநாடு உணவகத்தின்’ ஊழியர் திருவாட்டி அன்னபூரணி.

கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்த கடைக்காரர்களே தங்களது சொந்த முயற்சியில் வாடிக்கையாளர்கள் ஒரு மீட்டர் இடைவெளியில் வரிசையில் நிற்க ஒட்டுவில்லைகளை ஒட்டியிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

குறிப்பாக நண்பர்களுடன் சேர்ந்தோ, குடும்பமாகவோ வருவோர் ‘பாதுகாப்பான இடைவெளி’ விதிமுறையைப் பின்பற்றுவதில்லை என்றும் அதை வலியுறுத்தும் சுவரொட்டிகள் ஆங்காங்கே இருந்தாலும் அதை அவர்கள் கவனிப்பதாகத் தெரியவில்லை என்றும் சொல்லப்படுகிறது.

கூட்டமாக இருந்தால் உணவைப் பொட்டலம் கட்டி, எடுத்துச் செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறது. ஆனால், ஒரு சிலருக்கு அது சாத்தியமில்லாமல் இருக்கிறது.

“உணவைப் பொட்டலமிட்டு எடுத்துச் சென்று சாப்பிட இடவசதி இல்லை,” என்றார் துப்புரவாளராகப் பணிபுரியும் திரு சேகர்,.

“காலங்காலமாக இங்குதான் சாப்பிடுகிறேன். இருக்கைகளின் எண்ணிக்கை பாதியாகிவிட்டது. அதனால், கூட்டமான நேரங்களில் எங்கு சென்று உண்பது எனத் தெரியவில்லை,” என்றார் அவர்.

பொது இடங்களுக்குச் செல்லும்போது கவனமாக இருப்பதாகவும் எந்தக் கடைக்குச் சென்றாலும் நெரிசல் இல்லாமல் இருப்பதாகவும் கூறினார் மளிகைப்பொருட்கள் வாங்க தேக்காவிற்கு வந்திருந்த திரு பாஸ்கரன்.

#சிங்கப்பூர் #லிட்டில் இந்தியா #பாதுகாப்பான இடைவெளி

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!