(காணொளி): வெறிச்சோடிப் போனது லிட்டில் இந்தியா

நண்பர்களுடன் அளவளாவி உண்டு மகிழும் உணவகங்கள், மக்கள் கூட்டம் நிரம்பி வழியும் மளிகைக்கடைகள், காய்கறிக் கடைகல், பழக்கடைகள் என்று சாதாரண நாளே திருவிழாபோல் காட்சி தரும் லிட்டில் இந்தியா.

ஆனால், கொரோனா கிருமிப் பரவலைத் தடுக்கும் நோக்கில் இன்று முதல் நடப்புக்கு வந்துள்ள புதிய நடைமுறைகளால் நாடு முழுவதும் அலுவலகங்களும் அத்தியாவசியப் பொருட்கள் விற்காத கடைகளும் மூடப்பட்ட நிலையில், வித்தியாசமாக, அமைதி நிறைந்த இடமாக லிட்டில் இந்தியா இன்று (ஏப்ரல் 7) காட்சியளித்தது.

Remote video URL

உணவை வாங்கிச் செல்லும் சேவையை மட்டும் வழங்கிய உணவகங்கள், ஓருவர் மட்டுமே பொருட்கள் வாங்கிக்கொண்டிருந்த மளிகைக் கடைகள், அங்கொன்றும் இங்கொன்றுமாய் திறந்திருந்த காய்கறி கடைகள், பழக்கடைகள் மட்டுமே திறக்கப்பட்டிருந்த காட்சி லிட்டில் இந்தியாவில் வழக்கத்திற்கு மாறானது.

எந்நேரமும் ஓடிக்கொண்டே இருக்கும் இயல்பு நிலை தற்காலிக நிறுத்தத்திற்கு வந்தது.

மக்கள் நடமாட்டமும் மிகக் குறைவாகவே இருந்தது.

அந்த வட்டாரத்தில் காணப்பட்ட காட்சி இதுவரை யாரும் காணாத ஒன்று என்ற கருத்தை எஞ்சிய கடைக்காரர்களும் பாதசாரிகளும் வெளிப்படுத்தினர்.

இதே நிலை தொடர்ந்தால் கடைநடத்த முடியுமா என்ற வருத்தத்தில் கடைக்காரர்களும் பொருட்களின் விலை ஏற்றத்தைச் சமாளிக்க முடியுமா என்ற கேள்வியுடன் வாடிக்கையாளர்களையும் காண முடிந்தது. அவர்களில் சிலர் தங்களது கருத்துகளை தமிழ்முரசுடன் பகிர்ந்துகொண்டனர்.

இதன் தொடர்பிலான கூடுதல் செய்திகளுக்கு தமிழ் முரசு நாளிதழின் நாளைய (ஏப்ரல் 8) அச்சுப் பிரதியை நாடுங்கள்!

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!