படிப்படியாக சில வர்த்தகங்கள் செயல்படத் தொடங்கும்

கொரோனா கிருமிப்பரவலை முறியடிக்கும் அதிரடித் திட்ட கட்டுப்பாடுகளை சிங்கப்பூர் அரசாங்கம் படிப்படியாக தளர்த்தவுள்ளது.

பாரம்பரிய சீன மருத்துவ சிகிச்சைகள் சில இம்மாதம் 5ஆம் தேதி முதல் இயங்கவுள்ளன.

முடிதிருத்தும் நிலையங்கள், வீட்டிலிருந்து உணவு பண்டங்களை விநியோகிக்கும் சேவைகள், சலவை உள்ளிட்டவை ஒரு வாரம் கழித்து திறக்க அனுமதிக்கப்படும்.

பாரம்பரிய சீன மருத்துவ வல்லுநர்களால் அத்தியாவசியமானவை என தீர்மானிக்கப்படும் சில உடல் வலி சம்பந்தப்பட்ட சிகிச்சைகள் அனுமதிக்கப்படும்.

அத்துடன், பதிவு செய்யப்பட்ட பாரம்பரிய சீன மருத்துவ நிபுணர்கள் தங்களது பொருட்களை சிங்கப்பூருக்கு விற்க முடியும்.

இருந்தபோதும், ஆயுர்வேதம், சித்த மருத்துவம் உள்ளிட்ட பாரம்பரிய இந்திய மருத்துவச் சேவைகளுக்கும் சைரோபிராக்டி போன்ற மாற்று மருத்துவ சேவைகளுக்கும் உள்ள தற்போதைய காட்டுப்பாடுகள் தளர்த்தப்படமாட்டது என்று நோய்ப்பரவலை எதிர்கொள்வதற்காக அமைக்கப்பட் அமைச்சர்நிலை பணிக்குழு இன்று தெரிவித்தது.

தனியார் கொண்டோமினிய வீட்டு வளாகங்களில் மெதுநடை, உடற்பயிற்சி ஆகியவற்றின் மீதான தடையும் மே 5ஆம் தேதி முதல் அகற்றப்படும். இருந்தபோதும், அங்குள்ள உடற்பயிற்சிக்கூடங்களும் நீச்சல் குளங்களும் தொடர்ந்து மூடப்பட்டிருக்கும்.

அத்துடன், மே 12ஆம் தேதி முதல் முடித்திருத்த நிலையங்கள், வீட்டிலிருந்து உணவு பண்டங்களை விநியோகிக்கும் சேவைகள், சலவை உள்ளிட்டவை செயல்படத் தொடங்கலாம்.

மேலும், மே 19ஆம் தேதி முதல் பள்ளிகள் மாணவர்களை, குறிப்பாக இவ்வாண்டு தேசிய நிலையில் தேர்வுகளை எழுதும் கடைசி ஆண்டு மாணவர்களை சிறு சிறு குழுக்களாக பள்ளிக்கு மீண்டும் அனுமதிக்கும். வகுப்புகளுக்காக பள்ளிக்கூட வசதிகள் தேவைப்படும் மாணவர்களுக்கும் விடுமுறை நேரத்தில் ஆதரவு தேவைப்படுவோருக்கும் முன்னுரிமை கொடுக்கப்படும்.

செயல்படத்தொடங்கும் செயல்பாடுகள் தேதிவாரியாக:

மே 5 முதல்...

♦ பாரம்பரிய சீன மருத்துவம் சார்ந்த ‘அக்குபஞ்சர்’ சிகிச்சை முறை
(வலி நிவாரணத்திற்கு), பாரம்பரிய சீன மருந்துக் கடைகளில் பொருட்கள் விற்பனை.
♦ கொண்டோமினிய வளாகங்களில் நடைப்பயிற்சி, உடற்பயிற்சி.

மே 12 முதல்...

♦ கேக், தின்பண்டங்கள் போன்றவற்றை வாங்கி எடுத்துச் செல்லும் சேவை/விநியோகச் சேவை.
♦ வீட்டிலிருந்து இயங்கும் உணவு வர்த்தகங்களுக்கான விநியோகச் சேவை/சுயமாக பெற்றுக்கொள்ளும் சேவை.
♦ முடிதிருத்தகங்களில்
முடி வெட்டும் சேவை மட்டும்.
♦ சலவை நிலையங்கள்.
♦ செல்லப் பிராணிகளுக்கான உணவுப்பொருள் விற்கும் கடைகள்.

மே 19 முதல்...

♦ குறைந்த எண்ணிக்கையிலான மாணவர்களுக்குப் பள்ளிகளில் பாடங்களை நடத்தலாம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!