உணவகத்தில் உண்ணுதலும் வழிபாட்டு சேவைகளும் காத்திருக்க நேரிடலாம்

கேளிக்கைக் கூடங்கள் மற்றும் அதிகமான மக்களை ஈர்க்கக்கூடிய நடவடிக்கைகள் நோய் முறியடிப்புக் காலம் முடிவடைந்தபோதும் மீண்டும் செயல்படுவதற்கு இன்னும் கூடுதல் காலம் காத்திருக்க வேண்டியிருக்கும்.

அதேபோல், அமர்ந்து உண்ணும் மக்களை அதிகமான அளவில் ஈர்க்கக்கூடிய உணவகங்கள், வழிபாட்டு இடங்கள் ஆகியவையும்கூட முன்புபோல வழக்கநிலையில் செயல்படுவதற்கு இன்னும் கூடுதல் காலம் காத்திருக்க நேரிடலாம் என்று தேசிய வளர்ச்சி அமைச்ச ர் லாரன்ஸ் வோங் இன்று
முன்தினம் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

“தங்கள் குடும்ப உறுப்பினர்களுடனும் நண்பர்களுடனும் ஒன்றாக அமர்ந்து உணவு உண்ணுவதற்கு மக்கள் ஆர்வத்துடன் காத்திருக்கிறார்கள் என்பதை என்னால் உணர முடிகிறது. ஆனால் அதில் உள்ள அபாயங்களை மிகவும் கவனமாகப் பரிசீலிக்க வேண்டும்.

இதுபோன்ற அதிக மக்கள் கூடும் நிகழ்வுகளில்தான் கிருமித் தொற்று வேக மாக ப் பரவும்
என்பதை நாம் கருத்தில் கொள்ள வே ண்டும்,” என்றும் தமது அமைச்சர்நிலை அறிக்கையில் திரு வோங் குறிப்பிட்டார். அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் வாழ்க்கை முறை மாற்றங்களைப் பின்பற்றுவது எளிதான காரியமல்ல என்று கூறிய அமைச்சர், இந்த நெருக்கடி காலத்தில் நம்மையும் நமகு
குடும்பத்தையும் பாதுகாக்க நாம் இப்ப டிப்பட்ட மாற்றங்களை ஏற்றுக்கொள்ளத்தான் வே ண்டியுள்ள து. இதில் அனைவரது புரிந்துணர்வுக்கும் நன்றி என்றும் தெ ரிவித்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!