தேக்கா ஈரச்சந்தை இணையச் சந்தையானது

கொவிட்-19 நெருக்கடி காலத்தில் வீட்டிலிருந்தபடியே மளிகைப் பொருட்களை இணையம் வழி வாங்குவதை ஊக்குவிக்க, கடந்த செவ்வாய்க்கிழமையன்று தேக்கா சந்தையின் முதல் இணைய நேரடி விற்பனை நிகழ்ச்சி நடந்தேறியது. தகவல் தொடர்பு ஊடக மேம்பாட்டு ஆணையமும் ‘BlkJ’ எனும் அமைப்பும் இணைந்து ஏற்பாடு செய்த இந்தத் திட்டத்தில், காய்கறி, பழம், இறைச்சி, மீன், ஆகியவற்றை விற்கும் ஆறு கடைகள் இடம்பெற்றன.

“கொவிட்-19 கிருமித்தொற்று முறியடிப்புத் திட்டங்கள் நடைமுறைக்கு வந்ததிலிருந்து, கடையின் வியாபாரம் ஏறத்தாழ 40 விழுக்காடு சரிந்துள்ளது. வெளிநாட்டு ஊழியர்கள் வராதது உட்பட பொதுமக்கள் பலரும் தேக்காவில் பொருட்கள் வாங்குவதைக் குறைத்துக்கொண்டுள்ளனர்.

“இந்தப் புத்தாக்க முயற்சி, நம் வியாபாரத்துக்கு சற்று உயிரூட்டியுள்ளது,” என்றார் ஆட்டு இறைச்சியும் இதர காய்கறிகளையும் விற்கும் இரண்டு கடைகளை நடத்தி வரும் திரு முஸ்­தஃபா ‌‌‌ஷாஹுல் ஹமீது, 62. ‘ஹாஜி எம் என் ‌‌‌‌ஷாஹுல் ஹமீது மார்கெட்டிங்’ என்ற நிறுவனத்தின் கீழ், தேக்கா நிலை­யத்­தின் முதல தளத்தில் கடந்த 45 ஆண்­டு­களா­க இந்த கடைகள் உள்ளன.

ஆட்டு இறைச்சி விற்கும் திரு முஸ்தஃபாவின் கடை அங்கம், கிட்டத்தட்ட 30 நிமிடங்களுக்கு நீடித்தது. அவர் மகனான 40 வயது திரு நிஸாம் பீன் அவருடன் இணைந்து, ஃபேஸ்புக் தளத்தில் இடம்பெற்ற நேரடி இணைய விற்பனையை நடத்தினார். ‘தேக்கா ஆன்லைன் மார்க்கெட்’ என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவான இந்தக் காணொளி 12,000கும் மேல் பார்வையிடப்பட்டது.

திரு முஸ்­தஃபாவின் கடையில் பெரும்பாலான ஆட்டு இறைச்சி வகைகள் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து நாடுகளிலிருந்து வருகின்றன. விற்கப்பட்ட ஒவ்வொரு வகை இறைச்சிக்கும் விளக்கம் வழங்கப்பட்டு, அந்த இறைச்சித் துண்டுகளின் எண்ணிக்கையும் குறிப்பிடப்பட்டது. இறைச்சியின் அளவைப் பொறுத்து, இணையவாசிகள் அதற்கு கோரிக்கை வைக்கலாம். இணைய விற்பனையில் மொத்தம் $1,000க்கும் மேலான மதிப்பில் விற்பனைகள் செய்ததாகவும் இளையர்கள் பலரை இந்த விற்பனை நிகழ்வு ஈர்த்ததாகவும் குறிப்பிட்டார் திரு முஸ்­தஃபா.

“நமது மூத்த தலைமுறையினருக்கு, கடைக்கு வந்து நேரடியாக பொருட்களைப் பார்த்து வாங்குவது பழக்கமாகிவிட்டது. ஆனால் தொழில்நுட்பத்துடன் ஒன்றிணைந்த இளையர்கள், எளிதாக இணையத்திலேயே வாங்க விரும்புகிறார்கள். அவர்களைப் போன்றோரைச் சென்றடைவதற்கு இந்த திட்டம் உதவியாக இருக்கிறது,” என்றார் திரு முஸ்­தஃபா.

இத்துடன் வீட்டிற்கு அனுப்பும் சேவையும் உள்ளது. $20க்கும் மேல் பொருள் வாங்குவோருக்கு இலவசமாக உணவு அனுப்பும் சேவை வழங்கப்படுகிறது. இல்லையேல் $5 கட்டணம் செலுத்த வேண்டும். இரண்டாவது இணையச் சந்தை, அடுத்த செவ்வாய்க்கிழமை, நண்பகல் நேரத்தில் நடைபெறும். அதில் புதிய கடைக்காரர்கள் இடம்பெறுவர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!