கைக்கணினியில் தமிழ் முரசு; புதியதொரு வாசிப்பு அனுபவம்

சிங்கப்பூரின் ஒரே தமிழ் நாளிதழான தமிழ் முரசு இவ்வாண்டு தன் 85வது ஆண்டு நிறைவைக் கொண்டாடுகிறது. இந்தச் சிறப்பான தருணத்தில் தொடர்ந்து ஆதரவளித்து வரும் வாசகர்களுக்கு மின்னிலக்க வழி வாசிப்பு அனுபவத்தை வழங்கும் நோக்கில் புதிய ‘செய்தி கைக்கணினி’ தொகுப்பை இன்று முதல் தமிழ் முரசு அறிமுகம் செய்கிறது.

தமிழ் முரசு, ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் என இரு நாளிதழ்கள் அடங்கிய செய்தி கைக்கணினித் தொகுப்புக்கு tmsub.sg/tmstnt என்ற இணையப் பக்கம் வழியாக அல்லது 6388 3838 என்ற எண்ணில் தொடர்புகொண்டு பதிவு செய்யலாம். இந்த ஒரே தொகுப்பிற்குச் சந்தா செலுத்துவதன் மூலம் இரு மொழி மின்னிதழ்களையும் வாசித்து மகிழலாம்.

ஈராண்டு ஒப்பந்தத்தில் மாதம் $29.90 செலுத்தும் சந்தாதாரர்கள், தமிழ் முரசு, ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் என இரு மொழி மின்னிதழ்களையும் வாசிக்கலாம். அவர்களுக்கு ‘வைஃபை’ வசதியுடன் கூடிய, $398 மதிப்பிலான சாம்சுங் கேலக்சி டேப் ஏ (10.1”) வழங்கப்படும்.

இந்தக் கைக்கணினியில் ‘செய்தி கைக்கணினி’ செயலி ஏற்கெனவே நிறுவப்பட்டிருக்கும். ஒருமுறை மட்டும் உள்நுழைவு (login) விவரங்களைக் கொடுத்தால் போதும். ‘வைஃபை’ சேவையுடன் இணைக்கப்பட்டிருந்தால் அண்மைய நாளிதழ் தானாகவே தரவிறக்கம் செய்யப்பட்டுவிடும். அதன்பின் இணையச் சேவை இல்லாத நிலையிலும் செய்தி கைக்கணினி மூலம் மின்னிதழை வாசிக்க முடியும்.

உங்களுக்குப் பிடித்த செய்திகளை மட்டும் பிரித்தெடுக்கலாம். அவற்றைச் சமூக ஊடகங்கள் வழியாக குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் பகிர்ந்துகொள்ளலாம். எழுத்துருவைப் பெரிதாக்கிக்கொள்ளும் வசதியும் உண்டு.

அத்துடன், கடைசி 14 நாட்களுக்கான மின்னிதழ்களும் ஆவணப்படுத்தப்பட்டு இருக்கும்.

இந்தப் புதிய முயற்சி குறித்து தமிழ் முரசு நாளிதழின் ஆசிரியர் திரு ஜவஹரிலால் ராஜேந்திரன் கூறுகையில், “வரும் ஜூலை 6ஆம் தேதி 85வது ஆண்டு நிறைவைக் கொண்டாட இருக்கும் தமிழ் முரசு நாளிதழுக்கு இது ஒரு மிகச் சிறந்த தருணம். ஜூலை 15ஆம் தேதி தனது 175வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழ் உடனான இந்தக் கூட்டுமுயற்சி, இரு மொழி வாசகர்களையும் ஒன்றிணைக்கும் என்ற வகையிலும் இது சிறப்பான தருணம். செய்தி கைக்கணினியின் சந்தாதாரர்கள், இவ்விரு மொழி நாளிதழ்களிலும் சிறந்தவற்றை அனுபவித்து மகிழலாம். புதியதோர் அடியை எடுத்து வைத்திருக்கிறோம்,” என்றார்.

‘தமிழவேள்’ கோ.சாரங்கபாணி, 1935ஆம் ஆண்டு ஜூலை 6ஆம் தேதி தமிழ் முரசு நாளிதழைத் தோற்றுவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் முரசு, ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தி கைக்கணினி தொகுப்பு சந்தாதாரர் ஆவதற்கான இணையப் பக்கத்திற்கு நேரடியாகச் செல்வதற்கு இணைப்பில் உள்ள கியூஆர் குறியீட்டை 'ஸ்கேன்' செய்யுங்கள்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!