சிங்கப்பூரில் மேலும் 752 பேருக்கு கிருமித்தொற்று; மொத்த எண்ணிக்கை 26,098

சிங்கப்பூரில் இன்று (மே 14) நண்பகல் நிலவரப்படி, புதிதாக 752 பேருக்கு கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இங்கு கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26,098 ஆகியுள்ளது.

புதிய சம்பவங்களில் 2 சிங்கப்பூரர்கள் அல்லது நிரந்தரவாசிகள் பாதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் விடுதிகளில் தங்கியிருக்கும் வெளிநாட்டு ஊழியர்கள்.

கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் பற்றிய கூடுதல் விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என்று சுகாதார அமைச்சின் அறிக்கை குறிப்பிட்டது.

சுகாதார அமைச்சு நேற்றிரவு வெளியிட்ட அறிக்கையின்படி, புதிதாக குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 958; நேற்று புதிதாக 675 பேருக்கு மட்டுமே கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்த வாரத்திலேயே இரண்டாவது நாளாக, புதிய கிருமித்தொற்று சம்பவங்களைவிட குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை அதிகமாகப் பதிவாகியுள்ளது.

கடந்த திங்கட்கிழமை 504 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், அன்றைய தினம் 486 பேருக்கு மட்டுமே கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டது.

நேற்றைய நிலவரப்படி, கிருமித்தொற்று கண்டவர்களில் 19 விழுக்காட்டினர் குணமடைந்து வீடு திரும்பினர்.

நேற்று 1,037 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் 19 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்தனர். மிதமான அறிகுறிகளுடன் 19,479 பேர் சமூகப் பராமரிப்பு வசதிகளில் இருந்தனர்.

நேற்று கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் இருவர் சிங்கப்பூரர்கள், விடுதிகளுக்கு வெளியில் தங்கியிருக்கும் ஊழியர்கள் இருவர்; விடுதிகளில் தங்கியிருக்கும் ஊழியர்கள் 671 பேர்.

சிடிபிஎல் துவாஸ் தங்கும் விடுதியில் பனியில் இருந்த 48 வயது சிங்கப்பூரர் அந்த விடுதியில் இருக்கும் கிருமித்தொற்று குழுமத்துடன் சேர்ந்தவர். மற்றொரு சிங்கப்பூரரான 73 வயது மூதாட்டி ஏற்கெனவே கண்டறியப்பட்ட குழுமங்களுடன் தொடர்புடையவர் அல்ல.

நேற்றைய நிலவரப்படி, விடுதிகளில் தங்கியிருக்கும் 323,000 ஊழியர்களில் 7 விழுக்காட்டினருக்கு மேல் கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளது. விடுதிக்கு வெளியே தங்கியிருக்கும் வேலை அனுமதிச்சீட்டு கொண்டு வெளிநாட்டு ஊழியர்களில் 0.07 விழுக்காட்டினருக்கும் சிங்கப்பூரர்கள், நிரந்தரவாசிகள், அனுமதிச்சீட்டு வைத்திருப்போரிடையே 0.03 விழுக்காட்டினருக்கும் கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளது.

விடுதிகள், விடுதிகளாக மாற்றப்பட்டுள்ள தொழிற்சாலைகள் ஆகியவற்றில் தங்கியிருப்போரிடையே விரிவான அளவில் கிருமித்தொற்று பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பது அங்கிருக்கும் ஊழியர்களிடையே கிருமித்தொற்று அதிகம் கண்டறிய காரணமாக இருக்கலாம்.

நேற்று புதிதாக ஆறு கிருமித்தொற்று குழுமங்கள் கண்டறியப்பட்டன. 3 கியன் டெக் கிரசென்ட், 119 நெய்தல் ரோடு, 1 சுங்கை காடுட் ஸ்திரீட் 4, 1020 தாஇ செங் கவென்யூ, 17C துவாஸ் ரோடு, 29 துவாஸ் வியூ வாக் 2 ஆகியவை அவை.

கொவிட்-19 கிருமித்தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 21 ஆக உள்ளது. கிருமித்தொற்று கண்ட, ஆனால் வேறு காரணங்களால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 9 ஆக உள்ளது.

முழுமையான செய்தியைப் படிக்க தமிழ் முரசு சந்தாதாரர் ஆகுங்கள். https://tmsub.sg/online

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!