பாலர் பள்ளிகளில் பணியாற்றும் அனைவருக்கும் கொவிட்-19 பரிசோதனை

பாலர் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுமுன் அங்கு பணியாற்றுவோர் அனைவருக்கும் ஒருமுறை மட்டும் எச்சில் அல்லது சளி மாதிரியைக் கொண்டு கொவிட்-19 கிருமித்தொற்றுப் பரிசோதனை மேற்கொள்ளப்படும். நாளை (மே 15) முதல் இந்த நடவடிக்கை தொடங்கும்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மேற்கொள்ளப்படும் இந்தக் கட்டாயப் பரிசோதனை, பாலர் பள்ளி முதல்வர்கள், ஆசிரியர்கள் உட்பட அங்கு பணியாற்றும் அனைவருக்கும் பொருந்தும்.

பாலர் பருவ மேம்பாட்டு அமைப்பின் தலைமை உரிம அதிகாரி ஜேமி ஆங், எச்சில்/சளி மாதிரி பரிசோதனையின் அவசியம் குறித்து பாலர் பள்ளி நடத்துநர்களுக்கு நேற்று சுற்றறிக்கை அனுப்பினார்.

பலதுறைத் தொழில்கல்லூரிகளில் அமைக்கப்பட்டுள்ள நான்கு பரிசோதனை மையங்களில் நாளை முதல் இம்மாதம் 26ஆம் தேதி வரை சுகாதார அமைச்சு, பாலர் பள்ளி பணியாளர்களுக்கு பரிசோதனைகளை மேற்கொள்ளும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாலர் பள்ளி பணியாளர்களிடம் நடத்தப்படும் எச்சில்/சளி மாதிரி சோதனைக்கு ஆகும் செலவை அரசாங்கமே ஏற்றுக்கொள்ளும்.

பாலர் பள்ளித் துறையில் கிட்டத்தட்ட 25,000 ஆசிரியர்களும் திட்டப் பணியாளர்களும் இருப்பதாகக் கூறப்படுகிறது.


முழுமையான செய்தியைப் படிக்க தமிழ் முரசு சந்தாதாரர் ஆகுங்கள். https://tmsub.sg/online

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!