கொவிட்-19 தொற்று இருந்ததா என்பதை அறிய புதிய பரிசோதனை; சுமார் ஒரு மணி நேரத்தில் முடிவுகள்

ஒருவர் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தாரா என்பதை ஒரு மணி நேரத்துக்குள் கண்டறியும் புதிய கொவிட்-19 பரிசோதனைக் கருவியை ‘டியுக்-என்யுஎஸ்’ மருத்துவப் பள்ளி கண்டுபிடித்துள்ளது.

தற்போதுள்ள வழக்கமான முறையைப் பயன்படுத்தினால் பரிசோதனை முடிவுகளைப் பெற பல நாட்களாகும்.

சாத்தியமுள்ள தடுப்பு மருந்துகள் பயனளிக்கின்றனவா, மக்கள்தொகையில் எத்தனை விகிதத்தினர் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர், தொடர்பு தகவலறிதல் போன்றவற்றுக்கு இந்தப் புதிய பரிசோதனையைப் பயன்படுத்தலாம்.

சிங்கப்பூரில் கிருமிப் பரவல் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் தளர்த்தப்படவுள்ள நிலையில் இது மிக முக்கியமாகிறது.

கொரோனா கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் உடல் அணுக்கள் பாதிக்கப்படுவதிலிருந்து தடுப்பதற்கு உரிய குறிப்பிட்ட ‘ஆன்டிபாடிகளை’ அடையாளம் காண உதவும் இந்தப் புதிய பரிசோதனை, சிங்கப்பூர் மருத்துவமனைகளில் உள்ளது.

ஒருவர் கிருமித்தொற்றால் பாதிக்கப்படும்போது அவரது உடலில் ஆயிரக்கணக்கான மாறுபட்ட ‘ஆன்டிபாடிகள்’ உருவாகும். இவை கிருமிகளுடன் பிணைந்திருப்பதால் அவை ‘பிணைக்கும் ஆன்டிபாடிகள்’ எனப்படும்.

ஆனால், அத்தகைய ‘ஆன்டிபாடிகள்’ அனைத்தும் கிருமியை செயலிழக்கச் செய்வதில்லை. குறிப்பிட்ட சில ‘ஆன்டிபாடிகள்’ மட்டுமே கிருமியை செயலிழக்கச் செய்யும்.

புதிய பரிசோதனைக் கருவிக்கு கொரோனா கிருமியை அடையாளம் காணும் திறன் உள்ளது. இந்தப் புதிய பரிசோதனையை வேகமாகச் செய்து முடிக்க இயலும் என்பதுடன் அதற்கென பிரத்தியேக நிபுணத்துவம் அல்லது சாதனங்கள் தேவையில்லை.

மருத்துவமனையிலோ வழக்கமான ஆய்விலோ பயன்படுத்த முடியும். இதன் காரணமாக இந்தக் கருவியை உலக அளவில் எளிதில் பயன்படுத்த முடியும்.

இணையம் வழி கலந்துரையாடல் ஒன்றில் இது குறித்து அந்த மருத்துவப் பள்ளி அறிவித்தது.

‘சிபாஸ்’ (cPass) எனப்படும் இந்தக் கருவியை ‘ஜென்ஸ்கிரிப்ட் பயோடெக்’ நிறுவனத்துடனும் ‘ஏ*ஸ்டார்’ நிறுவனத்தின் ‘டிஎக்ஸ்டி ஹப்’புடனும் இணைந்து டியுக்-என்யுஎஸ் மருத்துவப் பள்ளி உருவாக்கி, உற்பத்தி செய்ய உள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!