வூஹானில் கிருமித்தொற்று பரிசோதனை: கூட்டத்தில் கிருமி பரவுமோ என மக்கள் அச்சம்

வூஹான்: கொரோனா கிருமி முதன்முறையாக கண்டறியப்பட்ட சீனாவின் வூஹான் நகரில் கிருமித்தொற்றுப் பரிசோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், பரிசோதனை நிலையங்களில் கூட்டம் நிறைந்து வழிவது குறித்து அந்நகர குடியிருப்பாளர்கள் அக்கறை தெரிவித்துள்ளனர்.

வூஹானில் கடந்த வாரம் புதிய கிருமித்தொற்று குழுமங்கள் அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து அந்நகரில் வசிக்கும் 11 மில்லியன் பேரைப் பரிசோதிக்கும் பெரும் இலக்கை அந்நகர நிர்வாகம் நிர்ணயித்திருந்தது.

கிருமித்தொற்று உறுதிசெய்யப்பட்டவர்களிடம் அதற்கான அறிகுறிகள் தென்படாததையடுத்து, கிருமித்தொற்று அபாயத்தைக் கண்டறிய சுகாதார அதிகாரிகள் நகரம் முழுவதும் பரிசோதனையை முடுக்கிவிட்டுள்ளனர்.

கிருமித்தொற்று பரிசோதனைக்கு உட்படுத்தப்படும் அதேவேளையில், வரிசையில் நிற்கும் மற்றவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்ததன் காரணமாக தங்களுக்கும் கிருமி தொற்றிவிடுமோ என்ற அச்சத்தை மக்கள் வெளிப்படுத்தியுள்ளனர். வரிசையில் நிற்கும் ஏராளமானோர் சமூக இடைவெளியைக் கடைப்பிடித்திருந்தாலும், ஒரு சிலர் அந்த நடைமுறையை அலட்சியப்படுத்தியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், நகர மக்கள் அனைவரையும் பரிசோதிப்பது பெரிய செலவுமிக்க நடைமுறை என்றும் அது எந்த அளவிற்குப் பயனளிக்கும் என்றும் அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
கிருமித்தொற்றுப் பரிசோதனை முடிவுகள் எப்போது தங்களிடம் தெரிவிக்கப்படும் என்பது குறித்து அதிகாரிகள் சொல்லவில்லை எனக் குடியிருப்பாளர்கள் கூறினர்.

இதற்கிடையே, சீனாவில் நேற்று முன்தினம் புதிதாக எட்டுப் பேருக்கு கொரோனா கிருமித்தொற்று உறுதிசெய்யப்பட்டது. அதற்கு முந்தைய நாள் அந்த எண்ணிக்கை நான்காக இருந்தது. எந்தவோர் அறிகுறியும் இல்லாமல் கிருமித்தொற்று உறுதிசெய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 13ஆக பதிவானது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!