சிங்கப்பூரில் மேலும் 682 பேருக்கு தொற்று; 22வது நபர் உயிரிழப்பு

சிங்கப்பூரில் இன்று (மே 17) நண்பகல் நிலவரப்படி, புதிதாக 682 பேருக்கு கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இங்கு கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 28,038 ஆகியுள்ளது.

புதிய சம்பவங்களில் சிங்கப்பூரர்கள் அல்லது நிரந்தரவாசிகள் நால்வர் பாதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் விடுதிகளில் தங்கியிருக்கும் வெளிநாட்டு ஊழியர்கள்.

கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் பற்றிய கூடுதல் விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என்று சுகாதார அமைச்சின் அறிக்கை குறிப்பிட்டது.

கொவிட்-19 நெருக்கடிகளால் 67 வயது சிங்கப்பூரர் உயிரிழந்ததாக நேற்றிரவு சுகாதார அமைச்சு வெளியிட்ட அறிக்கை தெரிவித்தது. கிருமித்தொற்றால் சிங்கப்பூரில் உயிரிழந்த 22வது நபர் இவர். ஏப்ரல் மாதம் 7ஆம் தேதி கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்ட அந்த ஆடவருக்கு இதய நோய், உயர் ரத்த அழுத்தம், உயர் ரத்தக் கொழுப்பு போன்ற பிரச்சினைகள் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

அவரது குடும்பத்தாருக்கு வேண்டிய உதவிகளை செங்காங் பொது மருத்துவமனை நல்கி வருகிறதென அமைச்சு தெரிவித்தது.

சுகாதார அமைச்சு நேற்றிரவு வெளியிட்ட அறிக்கையின்படி, புதிதாக குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 1,094. மூன்றாவது முறையாக, ஒரு நாளில் குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை ஆயிரத்துக்கும் அதிகமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

நேற்று கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் நால்வர் சிங்கப்பூரர்கள். அவர்களுள் ஓர் ஆடவர் 31 வயது விடுதி கண்காணிப்பாளர்.

மற்ற மூவரில் ஒருவர் 54 வயது ஆடவர். அவர் கோச்ரேன் லாட்ஜ் IIல் பணியாற்றுபவர். மற்ற இருவரும் அவரது வீட்டில் இருந்த இரண்டு பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

விடுதிகளுக்கு வெளியே தங்கியுள்ள வெளிநாட்டு ஊழியர்கள் நால்வருக்கு நேற்று கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், மற்ற 457 பேரும் விடுதிகளில் வசிப்பவர்கள்.

நேற்றுவரை 8,342 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

எண் 9 சுங்கை காடுட் வே, எண் 7 டெக் பார்க் கிரசென்ட், எண் 137 துவாஸ் வியூ ஸ்குவேர் ஆகிய 3 புதிய கிருமித்தொற்று குழுமங்கள் நேற்று கண்டறியப்பட்டன.

கொவிட்-19 கிருமித்தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 22 ஆக உள்ளது. கிருமித்தொற்று கண்ட, ஆனால் வேறு காரணங்களால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 9 ஆக உள்ளது.

உலக அளவில் 4.6 மில்லியன் மக்கள் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் சுமார் 310,000 பேர் உயிரிழந்தனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!