புதிதாக 570 பேருக்கு கொரோனா

சிங்கப்பூரில் புதிதாக 570 பேரை கொரோனா கிருமி தொற்றியுள்ளது. இதனுடன் இந்நாட்டின் மொத்த கிருமித்தொற்றுச் சம்பவங்களின் எண்ணிக்கை 29, 364க்கு உயர்ந்துள்ளது.

புதிதாக பாதிக்கப்பட்டோரில் இருவர் சிங்கப்பூரர்கள் மற்றும் நிரந்தரவாசிகள் என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. எஞ்சியோர் ஊழியர் தங்கும் விடுதிகளைச் சேர்ந்தவர்கள்.

சிங்கப்பூரில் கொவிட்-19 கிருமித் தடுப்பு நிலவரம் முன்னேற்றம் அடைவதற்கான அறிகுறிகள் அண்மையில் தென்பட்டு வருகின்றன.

கடந்த வாரத்தில் இந்நோயிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியோரின் எண்ணிக்கை, புதிய நோயாளிகளின் எண்ணிக்கையை விஞ்சியுள்ளது.

நேற்று அறிவிக்கப்பட்ட புதிய நோயாளிகளில் ஒருவர் சிங்கப்பூரர். முப்பது வயதான அவர், இந்நோயால் பாதிக்கப்பட்டதாக ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட பீஷான் எம்ஆர்டி நிலைய ஊழியரின் குடும்ப உறுப்பினர். அத்துடன், செவ்வாய்க்கிழமை நிலவரப்படி பத்து பேர் மட்டும் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!