சுடச் சுடச் செய்திகள்

நான்கு தலைமுறையினர் ஒன்றாகக் கொண்டாடும் நோன்புப் பெருநாள்

பாட்டி, பெற்றோர், மனைவி, இரட்டையராகப் பிறந்த மகன்கள் என குடும்பத்தினர் அனைவருடனும் இணைந்து இன்று நோன்புப் பெருநாளை இனிதே கொண்டாடுகிறார் திரு அப்துல் ரெஜாக், 35. 

கொவிட்-19 கிருமித்தொற்று முறியடிப்பு நடவடிக்கைகளால் வீட்டிலேயே இருக்க வேண்டிய சூழலில், பெருநாளைக் குடும்பத்துடன் சேர்ந்து கொண்டாடும் வாய்ப்பு கிடைத்துள்ளதால் திரு ரெஜாக்குக்குப் பெருமகிழ்ச்சி. 

கிட்டத்தட்ட ஆறு மாதங்களுக்கு முன்னர் திரு முஹம்மது நூர்தீனும் தாயார் திருமதி நர்கிஸ் பேகமும் தெம்பனிசில் உள்ள தங்களுடைய மகன் திரு ரெஜாக்கின் வீட்டில் வசிக்க முடிவெடுத்தனர். 

இதற்கு முன்னர் கிட்டத்தட்ட 34 ஆண்டுகளுக்கு மேலாக நார்த் பிரிட்ஜ் சாலையிலுள்ள ஒரு வீட்டில் அவர்கள் வசித்து வந்தனர்.

திரு நூர்தீன் - திருமதி நர்கிஸ் தம்பதியருக்கு இரு மகள்களும் ஒரு மகனும் உள்ளனர். 

பிள்ளைகள் அனைவருக்கும் திருமணமாகிவிட்டது. அதன்பின் தனிக் குடித்தனம் சென்றபோதும் ஒரே பகுதியிலேயே வசிக்க வேண்டும் என அவர்கள் முடிவெடுத்தனர். அந்த வகையில், கடந்த ஏழு ஆண்டுகளாக ஒவ்வொரு குடும்பமாக தெம்பனிஸ் பகுதியில் வீடு வாங்கி குடிபெயர்ந்தனர். 

குறிப்பாக திரு ரெஜாக்கின் வீடும் அவருடைய தங்கை ஒருவரின் வீடும் பக்கத்து பக்கத்து வீடுகள். இன்னொரு தங்கை சில கட்டடங்கள் தாண்டி வசிக்கிறார். 

பிள்ளைகள் அனைவரும் ஒரே வட்டாரத்தில் வசிப்பதால் நூர்தீன் தம்பதியர் தங்களது வீட்டை வாடகைக்கு விட்டுவிட்டு மகன் ரெஜாக்கின் வீட்டிற்குக் குடிபெயர்ந்தனர். 

கிருமித்தொற்று ஏற்படுத்திய இக்கட்டான சூழலிலும் குடும்பத்தினருடன் சேர்ந்து ஒன்றாக வசிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளதை எண்ணி மனநிறைவு காண்கிறார் 61 வயதான திரு நூர்தீன்.

 

இவர்களது நோன்புப் பெருநாள் கொண்டாட்டம் பற்றிய விரிவான செய்திகளை வாசிக்க நாளைய (மே 24) தமிழ்முரசு நாளிதழை நாடுங்கள்!

அனைத்து செய்திகளையும் முழுமையாக வாசிக்க தமிழ் முரசு சந்தாதாரர் ஆகுங்கள். https://tmsub.sg/online

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon