சிங்கப்பூரர்கள் பலனடைய இன்னும் நிறைய வாய்ப்புகள்

நாடுகள் பலவும் கொவிட்-19 கொள்ளைநோய் காரணமாக உலகமயமாதலில் இருந்து பின்வாங்கும் நிலையில் குறைந்த உலகத் தொடர்புகளைக் கொண்டிருக்கும் சிங்கப்பூரின் ஊழியர்களும் வர்த்தகங்களும் தங்களுக்கான வாய்ப்புகளைப் பெற இயலும் என்று வர்த்தக தொழில் அமைச்சர் சான் சுன் சிங் தெரிவித்து உள்ளார்.

மற்ற இடங்களில் எளிதில் கிடைக்காத, தொட்டுணர முடியாத வலுவான திறன்களை சிங்கப்பூர் கொண்டிருப்பதால் இது சாத்தியமாகும் என்றும் வர்த்தக மையமாக அதன் தொடர்புத் திறனை கொண்டிருப்பதும் அத்திறன்களில் ஒன்று என்றும் அவர் நேற்று நிகழ்த்திய தேசிய ஒலிபரப்பு உரையில் குறிப்பிட்டார்.

கடந்த வாரம் தொடங்கி இன்று (ஜூன் 14) வரை சிங்கப்பூரில் இடம்பெற்ற நான்காவது தேசிய ஒலிபரப்பு உரை இது. கொரோனோ கிருமிக்குப் பிந்திய எதிர்காலம் பற்றி பிரதமர் உள்ளிட்ட ஆறு அமைச்சர்கள் இந்த உரையை ஆற்றி வருகின்றனர்.

சிங்கப்பூர் துறைமுக ஆணையத்தின் பாசிர் பாஞ்சாங் முனைய கட்டடம் 3லிருந்து உரை நிகழ்த்திய அமைச்சர் சான், “மக்களையும் வர்த்தகங்களையும் முன் னேற்ற வழிகாட்டும் அதேநேரம் அடுத்த தலைமுறைக்கான உள்கட்டமைப்பில் முதலீடு செய்யவும் சிங்கப்பூர் திட்டங்களைக் கொண்டிருக்கிறது,” என்றார்.

“இந்த கொள்ளைநோய் நாடுகளுக்கு இடையில் தன்னைப்பேணித்தனத்தை அதிகரித்து தடைகளை ஏற்படுத்தியுள்ளபோதிலும் அதனால் ஏற்படக்கூடிய நெருக்குதல்களை சிங்கப்பூர் எதிர்கொண்டு சமாளிக்க வேண்டும். குறைவான தொடர்புடைய உலகம் என்றால் மேலும் ஏழ்மையான உலகம் என்றும் அனைவருக்கும் குறைவான வாய்ப்புகளைப் பெற்றிருக்கும் உலகம் என்றும் பொருள். அதேநேரம் குறைவான தொடர்புடைய சிங்கப்பூர் என்பது நமக்குக் கிடைக்கும் வேலைகளின் எண்ணிக்கையும் தரமும் குறைந்ததாக இருக்கும் என்று பொருள்படும். இருந்தபோதிலும் கட்டமைப்புகளை உருவாக்கி, சந்தைகளையும் விநியோகத் தொடர்புகளையும் பன்மயப்படுத்தி மீள்திறனை சிங்கப்பூர் வளர்த்துக்கொண்டு உள்ளது. அதிக தன்னைப்பேணித்தனம் நிலவினாலும் குறைந்த தொடர்பிலும் நம்மால் சிறப்புற நீடிக்க முடியும்.

கொள்ளைநோய் காரணமாக வேலைகளையும் வருமானத்தையும் ஊழியர்கள் இழந்துள்ளனர். வரும் மாதங்களில் மேலும் அதிகமானோர் வேலை இழக்கக்கூடும். நமது உடனடி கவனம் இந்த அம்சங்களின் மீதுதான். அதனால்தான் வரும் ஆண்டில் சுகாதாரப் பராமரிப்பு, ஆரம்பகால பாலர்பருவ கல்வி ஆகியன உள்ளிட்ட பல்வேறு துறைகளில் 100,000 வேலைகளை உருவாக்கவும் பயிற்சி வாய்ப்புகளை ஏற்படுத்தவும் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

“நிலைமை மோசமடைந்தால் மேலும் அதிகமான வேலைகளை உருவாக்க வேண்டிய நிலையும் ஏற்படக்கூடும். சிங்கப்பூர் அதன் பொருளியல் நடவடிக்கைகளை மீண்டும் தொடங்கினாலும் சில நிறுவனங்கள் அதன் பாணியை மாற்ற வேண்டிய அவசியம் ஏற்பட்டு உள்ளது. அந்த மாற்றத்துக்கு ஆதரவுக்கரம் நீட்டப்படும். பட்டதாரிகளுக்கும் பணியிடைக்கால ஊழியர்களுக்கும் முன்கூட்டியே பயிற்சி அளிக்கவும் வேலைகளை வழங்கவும் ஆதரவளிக்கப்படும். சிங்கப்பூர் வெளிப்படையாக நடந்துகொள்வதால் உலக நாடுகளின் நம்பிக்கையைப் பெற்றுள்ளது. அதன் காரணமாக முதலீட்டாளர்கள் தங்களது வர்த்தகங்களை விரிவுபடுத்த சிங்கப்பூரை தங்களுக்கு ஏற்ற தளமாக தேர்வு செய்துள்ளனர். திறன்பெற்ற ஊழியரணியைக் கொண்ட நிலையான சமூகம் என்பதும் அவர்கள் சிங்கப்பூரைத் தேர்ந் தெடுப்பதற்கான மற்ற காரணங்கள்,” என்றார் திரு சான்.

அனைத்து செய்திகளையும் முழுமையாக வாசிக்க தமிழ் முரசு சந்தாதாரராகுங்கள்! https://tmsub.sg/online

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!