தமிழ் முரசில் சிங்கப்பூர் வேலைவாய்ப்புச் செய்திகள்

உலகப் பொருளியல் சரிவை சிங்கப்பூரால் தடுக்க முடியாது.ஆனால், அது உலகின் பல நாடுகளில் தெரியும் சமூக ஒற்றுைமயின்மை, ஒடுங்கும் போக்கு, விரக்தி மனப்பான்மை ஆகியவற்றை முழுமையாக எதிர்த்து செயல்பட சிங்கப்பூரர்களுக்கு அறைகூவல் விடுத்துள்ளார் மூத்த அமைச்சர் தர்மன் சண்முகரத்னம்.

ஜூரோங் ஈஸ்ட்டில் உள்ள தேவன் நாயர் வேலைவாய்ப்பு, வேலைத்திறன் கழகத்தில் இம்மாதம் 17ஆம் தேதி பேசியபோது, வேலையிழந்தோர் மீண்டும் வேலைக்குச் செல்வதை உறுதி செய்வதே அரசாங்கத்தின் தலையாய பணி என்று கூறிய திரு தர்மன், இதைச் சந்தை நிலவரத்துக்கு விட்டுவிட முடியாது என்று கூறினார்.

இதில், அவர்கள் வேலையிழந்தோருக்கு வேலை தேடித்தர, சமுதாயத்தில் ஒருவர் மேல்நிலைக்குச் செல்ல உதவும் வாய்ப்புகளை ஏற்படுத்தவும், சிரமங்கள் ஏற்படும்போது உதவி கிடைத்திடும் என்ற நம்பிக்கையை அவர்களுக்கு ஊட்டவும் வேண்டும் என்று அவர் கூறினார்.

வேலைவாய்ப்புகள் பற்றி தெரிந்துகொள்ள விரும்பும் தமிழ் முரசு வாசகர்களைக் கருத்தில் கொண்டு சிங்கப்பூரில் வேலை வாய்ப்பு செய்திகள் தமிழ் முரசு இணையப் பக்கத்தில் வெளியிடப்படுகின்றன.

STJobs, FastJobs ஆகிய வேலைவாய்ப்பு நிறுவனங்களின் வேலை வாய்ப்புகளை இங்கு காணலாம். 

அலுவலக நிர்வாகம் / எழுத்தர் பணி, அழைப்பு மையங்கள் / டெலிமார்க்கெட்டிங், விற்பனை / சில்லறை வர்த்தகம் / விளம்பரத் துறை,  சேமிப்புக் கிடங்கு / தளவாடங்கள் துறை, வாடிக்கையாளர் சேவை / வரவேற்பாளர்கள், விருந்தோம்பல் / உணவு, பானத்துறை, தற்காலிகப் பணி / நிகழ்ச்சி ஏற்பாடு ஆகிய 7 பிரிவுகளில் வேலைவாய்ப்புகள் வகைப்படுத்தப்பட்டுள்ளன.

வாசகர்கள் வேலைவாய்ப்புகளை எளிதில் காணும் முறையில் வேலைவாய்ப்புத் தகவல் இடம்பெறுகிறது.  

தொடர்ந்து பேசிய திரு தர்மன், மூத்த ஊழியர்கள் வேலை கிைடக்க சிறப்பு உதவி பெறுவர் என்று உறுதியளித்தார்.

இந்த நெருக்கடியான காலகட்டத்தில், தற்காலிக வேலைகள், வேலைப் பயிற்சித் திட்டங்கள் ஆகியவற்றின் மூலம் சிங்கப்பூரர்களை வேலையில் சேர்த்துக்கொள்ள ஊக்குவிக்கும் வகையில், ஒவ்வொரு துறையைச் சார்ந்த நிறுவனங்களுடன் அரசாங்கம் பணியாற்றி வருவதாக திரு தர்மன் சொன்னார்.

 

அனைத்து செய்திகளையும் முழுமையாக வாசிக்க தமிழ் முரசு சந்தாதாரராகுங்கள்! https://tmsub.sg/online