நீ சூனில் சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சி அரைமனதுடன் போட்டி: கா. சண்முகம்

சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சி, நீ சூன் குழுத் தொகுதியில் அரைமனதுடன் போட்டியிடுவதாக தோன்றுகிறது என்று அக்குழுத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினரும் சட்ட, உள்தறை அமைச்சருமான கா. சண்முகம் நேற்று தெரிவித்தார்.

“நீ சூன் குழுத் தொகுதியில் போட்டியிட சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சி எடுத்திருக்கும் முடிவுக்கான காரணத்தை நான் ஊகிக்கப் போவதில்லை. ஆனால் அக்கட்சி அரைமனதுடன் போட்டியிடுவதாக தோன்றுகிறது. ஒரு வாரத்துக்கு முன்பு நீ சூன் குழுத் தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பை மற்ற கட்சிகளிடம் கொடுத்துவிட்டு அதற்குப் பதிலாக வேறொரு தொகுதியைப் பெற அது முயன்றுகொண்டிருந்தது,” என்று திரு சண்முகம் தெரிவித்தார்.

மக்கள் செயல் கட்சியின் நீ சூன் ஈஸ்ட் கிளையிலிருந்து காணொளி மூலம் நடத்தப்பட்ட செய்தியாளர் கூட்டத்தில் பேசியபோது 61 வயது திரு சண்முகம் இக்கருத்துகளை வெளியிட்டார். அவருடன் நீ சூன் குழுத் தொகுதியில் போட்டியிடும் 52 வயது முகம்மது ஃபைஷால் இப்ராஹிம், 41 வயது லூயிஸ் இங், 38 வயது கேரி டான், 51 வயது டெரிக் கோ ஆகிய மசெக வேட்பாளர்களும் இருந்தனர்.

வெஸ்ட் கோஸ்ட் குழுத் தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பை சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சிக்கு தமது கட்சி விட்டுக்கொடுத்ததை அடுத்து, மற்ற பல தொகுதிகளில் தமது கட்சி போட்டியிட அத்தொகுதிகளிலிருந்து அக்கட்சி பின்வாங்கும் என்றும் சீர்திருத்தக் கட்சியின் தலைவர் திரு கென்னத் ஜெயரத்னம் கடந்த வாரம் தெரிவித்திருந்தார்.

நீ சூன் குழுத் தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பைத் தமது கட்சிக்கு அளிக்க சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சி முன்வந்ததாக திரு கென்னத் ஜெயரத்னம் தெரிவித்தார்.

ஆனால் நீ சூன் குழுத் தொகுதியில் போட்டியிடப்போவதில்லை எனத் தமது கட்சி முடிவு செய்ததாக அவர் தெரிவித்தார்.

நீ சூன் குழுத் தொகுதியின் மக்கள் செயல் கட்சியை எதிர்த்து போட்டியிடும் சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சியின் குழுவுக்கு 51 வயது டேமியன் டே தலைமை தாங்குகிறார். 56 வயது ஸ்ரீ நல்லக்கருப்பன், 53 வயது பிராட்லி போயர், 52 வயது கலா மாணிக்கம், 40 வயது தௌஃபிக் சுபான் ஆகியோரும் இடம்பெறுகின்றனர்.

“ஆனால், தேர்தலில் போட்டி இருப்பது நல்லது. அது குடியிருப்பாளர்களுக்குக் கூடுதல் தெரிவுகளை வழக்கும். போட்டிக்கு யார் வந்தாலும் எங்களால் ஆன அனைத்தையும் செய்து அவர்களை எதிர்கொள்ள வேண்டும்,” என்றார் திரு சண்முகம்.

அரசியலிலிருந்து ஓய்வுபெறும் முன்னாள் நீ சூன் குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் திருவாட்டி லீ பீ வாவின் சிறந்த பங்களிப்புக்கு திரு சண்முகம் நன்றி தெரிவி்த்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!