சுடச் சுடச் செய்திகள்

‘ஒவ்வொரு வாக்குக்காகவும் பாடுபடுவேன்’

வேலையா, குடியிருப்பாளர்களா என வரும்போது குடியிருப்பாளர்களின் தேவைகளுக்கே தாம் முன்னுரிமை அளிப்பதாக புக்கிட் பாத்தோக் தனித் தொகுதியில் போட்டியிடும் மக்கள் செயல் கட்சி வேட்பாளர் திரு முரளி பிள்ளை கூறினார். 

“நான் ஒரு பகுதிநேர நாடாளுமன்ற உறுப்பினர் என்று என்னைக் கருதியதில்லை. நான்கு வருடங்களுக்கு முன்பு தொகுதி வேட்பாளராக நின்றபோதே மக்களுக்கும் நாட்டிற்கும் சேவை புரிவதே எனது தலையாய கடமை என்று உறுதி எடுத்தேன். 

“இந்த நான்கு வருடங்களில் சமூகத் தலைவர்கள், குடியிருப்பாளர்கள், தொண்டூழியர்கள் என்று அனைவருடனும் வலுவான பிணைப்பை அமைத்துள்ளேன்,” என்றார் அவர். 

புக்கிட் பாத்தோக் குடியிருப்பாளர்கள் நலனிலும் அவர்கள் வாழ்க்கை மேம்பாட்டிலும் முழு கவனம் செலுத்திவருவதாக தமிழ் முரசுக்கு அளித்த பேட்டியில் திரு முரளி பிள்ளை கூறினார்.

தமது திட்டங்களில் பல கொவிட்-19 தொற்றுநோயின் விளைவுகளைக் கையாளும் வகையில் அமையும் என்று தெரிவித்த  திரு முரளி, 52, “அரசாங்கம் பல திட்டங்கள் கொண்டிருந்தாலும் சமூக அளவில் நாமே சுயமாக பிரச்சினைகளைத் தீர்க்க முயற்சி எடுக்க வேண்டும். எனது எல்லா திட்டங்களும் சமூகத்தையே மையமாகக் கொண்டவை. 2016லிருந்து இதுபோன்ற பல திட்டங்களை நான் நடைமுறைப்படுத்தியுள்ளேன்,” என்றார் அவர். 

இந்திய சமூகத்துடன் நல்ல தொடர்பில் இருந்து வருவதோடு இந்திய சமூகம் சந்திக்கும் பிரச்சினைகளும் சவால்களும் தமது கவனத்தில் இருப்பதாகவும் தெரிவித்தார். 

திரு முரளி, வளர்தமிழ் இயக்கம், தகவல் தொடர்பு ஊடக மேம்பாட்டு ஆணையத்தின் தமிழ் நிகழ்ச்சிகளுக்கான ஆலோசனைக் குழு, சிண்டாவின் அறங்காவலர் குழு, தமிழர் பேரவை என பல தமிழ், இந்திய அமைப்புகளுக்கு ஆலோசகராக இருந்து வருகிறார்.

கொவிட்-19 காலத்தில் பல வசதிகுறைந்த இந்திய குடும்பங்களும் வேலை கிடைக்காத பட்டதாரிகளும் சிரமங்களைச் சந்தித்து வருவதைத் தாம் அறிந்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார். 

சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சியின் தலைமைச் செயலாளர் திரு சீ சூன் ஜுவானுடன்  தேர்தல் களத்தில் மோதும் திரு முரளி, இது ஒரு கடுமையான போட்டியாக இருக்கும் என்று குறிப்பிட்டார். 

“புக்கிட் பாத்தோக் மக்களின் மனதை வெல்வதில் என் முழு கவனமும் இருக்கிறது. ஒவ்வொரு வாக்குக்காகவும் நான் பாடுபடுவேன். அவர்களின் ஆதரவைப் பெறமுடியும் என்ற நம்பிக்கையுடன் இருக்கிறேன். எனது திட்டங்கள் அவர்களது வாழ்வாதாரத்தை சிறந்ததாக மாற்றும்,” என்று திரு முரளி பிள்ளை குறிப்பிட்டார்.
 

 

அனைத்து செய்திகளையும் முழுமையாக வாசிக்க தமிழ் முரசு சந்தாதாரராகுங்கள்! https://tmsub.sg/online

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon