தெளிவான அதிகாரம் கிடைத்துள்ளது

நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் 61.2 விழுக்காட்டு வாக்குகள் பெற்ற மக்கள் செயல் கட்சிக்குத் (மசெக) தெளிவான அதிகாரம் கிடைத்துள்ளதாகக் கூறினார் தேசிய வளர்ச்சி அமைச்சர் லாரன்ஸ் வோங். இருப்பினும் விரும்பியபடி 65% வாக்குகள் கிடைக்கவில்லை என்றும் கிட்டத்தட்ட 100,000 வாக்குகள் இழந்துள்ளதை அது குறிக்கிறது என்றும் மசெகவின் மத்திய செயற்குழு உறுப்பினரான அவர் நேற்று கூறினார்.

மசெக தலைமையகத்தில் செய்தியாளர்களை நேற்று சந்தித்த அவர், அங்கிருந்து நேரலை வழியாக கட்சித் தொண்டர்களுடன் பேசினார்.

தேர்தல் முடிவுகள் குறித்த தமது முதல்கட்ட சிந்தனையைப் பகிர்ந்ததுடன் மசெகவுக்கு ஆதரவு குறைந்தது குறித்த காரணங்களையும் விளக்கினார்.

பாட்டாளிக் கட்சி நல்ல பிரசாரத்தை முன்னெடுத்ததாகக் கூறிய அவர், அரசாங்கத்தின் கொள்கைகளைத் தட்டிக் கேட்கும் வாய்ப்புகளும் விவாதங்களும் நாடாளுமன்றத்தில் அதிகம் இருப்பதை பல வாக்காளர்கள் விரும்புகின்றனர் என்றும் கூறினார்.

மசெகவிற்கு வலுவான ஆதரவு உள்ள மேற்குப் பகுதிகளில் புதிதாக உருவான சிங்கப்பூர் முன்னேற்ற கட்சி போட்டியிட்டதையும் அவர் சுட்டினார்.

இதற்கிடையே மசெகவின் இணைய பிரசாரம் வாக்காளர்களைச் சரிவர போய் சேரவில்லை என்றும் அமைச்சர் வோங் விவரித்தார்.

அதிக எண்ணிக்கையில் நல்ல தகவல்களைக் கொண்டு இணையத்தில் பிரசாரம் செய்தாலும் அவை அனைத்துமே மக்களைச் சென்றடைந்தது என்று கூறுவதற்கில்லை என்றார். குறிப்பாக இன்ஸ்டாகிராம், டெலிகிராம் போன்ற சமூக ஊடகத் தளங்களில் நல்ல வரவேற்பு இல்லை என்றும் அவர் சொன்னார்.

தேர்தலுக்குப் பிந்தைய கருத்துகள் இளைய வாக்காளர்களை மையமாகக் கொண்டுள்ளதாகவும் இளையர்கள் மசெகவுக்கு ஆதரவு வழங்கவில்லை என்று குறிப்பிடப்படுவதையும் அவர் சுட்டியிருந்தார். அதை மறுத்துக் கருத்துரைத்த அவர், 20களிலும் 30களிலும் உள்ள வாக்காளர்கள் மொத்த வாக்காளர்களில் மூன்றில் ஒரு பங்கினர் என்று குறிப்பிட்டார்.

அத்துடன் முதல்முறையாக வாக்களித்த 21 வயதுக்கும் 24 வயதுக்கும் இடையிலானோர், 10 விழுக்காட்டிற்கும் குறைவானவர்களே என்றும் அமைச்சர் வோங் சொன்னார்.

ஆனால், குறிப்பாக 40களிலும் 60களிலும் உள்ளோர் மத்தியிலும் பொருளாதார சரிவால் தனியார் குடியிருப்புப் பேட்டைகளில் வசிப்போர் மத்தியிலும் ஆதரவு குறைந்துள்ளதாக அமைச்சர் வோங் பகிர்ந்துகொண்டார்.

வருமானத்தில் ஒரு பகுதியை இழந்தது, வேலையின்மை, வர்த்தக முடக்கம் போன்ற பொருளாதார நெருக்கடி காரணமாக மூத்த வாக்காளர்கள், மக்கள் செயல் கட்சிக்கு எதிராக வாக்களித்துள்ளனர் என்றார் அவர்.

இருப்பினும் தற்போதைய தேர்தல் முடிவுகள் தெளிவான அதிகாரத்தைத் தந்துள்ளது என்றும் மசெக அரசாங்கத்தையே வாக்காளர்கள் விரும்புகின்றனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஆனால், சிங்கப்பூரர்கள் எதிர்நோக்கும் பல்வேறு சவால்களால், தற்போதைய தேர்தல் முடிவு இதைவிட மோசமாக இருந்திருக்கலாம் என்றும் திரு வோங் சொன்னார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!