சர்ச்சைக்குரிய ஃபேஸ்புக் பதிவுக்கு தெண்டாயுதபாணி கோயில் விளக்கம்

தேங் ரோட்டில் அமைந் திருக்கும் அருள்மிகு ஸ்ரீ தெண்டாயுதபாணி கோயிலில் கடந்த 19ஆம் தேதி தமது தந்தைக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவத்தைப் பற்றி திருமதி விக்னேஸ்வரி தமது ஃபேஸ்புக் பக்கத்தில் எழுதியிருந்தார்.

அப்பதிவின்படி, தமது 68 வயது தந்தை இரவு 7 மணிக்குள் கோயில் வளாகத்திற்கு வந்துவிட்டதாகவும் ஆனால் கோயிலில் தனிக்குழு ஒன்று வழிபாட்டில் ஈடுபட்டிருந்ததால் அவரால் இரவு 8 மணிக்குத்தான் கோயிலுக்குள் நுழைய அனுமதி வழங்கப்பட்டது என்றும் அப்பதிவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

கோயிலுக்கு வெளியே காத்து இருந்ததில் அவருக்கு கால்வலி ஏற்பட்டதாகவும் அந்நேரம் வழிபாடு தொடர்ந்து நீடித்ததால் கோயிலுக்கு உள்ளே சென்று அமரும் வேண்டுகோளுக்கு கோயில் ஊழியர் இணங்கவில்லை என்றும் அந்த ஃபேஸ்புக் பதிவில் கூறப்பட்டு இருந்தது.

செட்டியார் அல்லாதவர்களை கோயில் ஊழியர்கள் சரியாக நடத்தவில்லை என்ற திருமதி விக்னேஸ்வரியின் சர்ச்சைக்குரிய ஃபேஸ்புக் பதிவு சமூக ஊடகத்தில் பரவலாக பேசப்பட்டது. அவரது ஃபே ஸ்புக் பதிவு குறித்து அருள்மிகு ஸ்ரீ தெ ண்டாயுதபாணி கோயில் நிர்வாகம் நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டது. திருமதி விக்னேஸ்வரியின் பதிவில் தவறான விவரங்கள் உள்ளன என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

கோயிலின் கண்காணிப்பு கேமரா பதிவை ஆராய்ந்ததிலும் இந்தச் சம்பவத்துடன் தொடர்பு உடை ய கோயில் ஊழியர்களிடம் பேசியதிலும் சில விவரங்களை கோயில் நிர்வாகம் சேகரித்ததாக அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. அதில், திருமதி விக்னேஸ்வரியின் தந்தை இரவு 7.14 மணிக்குத்தான் கோயிலை சென்றடைந்ததாகவும் அந்நேரம் பார்த்து உபய வழிபாடு ஒன்று நடந்துகொண்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.

கொவிட்-19 தொடர்பான இரண்டாம் கட்ட தளர்வை முன்னிட்டு, எந்நேரத்திலும் 50 பேர் வரை மட்டுமே கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவர் என்ற கட்டுப்பாடு
நடப்பில் உள்ளது.

இரவு 7.24 மணிக்கு வரிசையில் இருந்த பக்தர்களுக்கு கோயிலுக்குள் சென்று பிரார்த்தனை செய்ய அனுமதி கொடுக்கப்பட,தாம் தனிப்பட்ட அர்ச்சனை செய்ய

காத்திருக்க போவதாக திருமதி விக்னேஸ்வரியின் தந்தை தெரிவித்தார். அர்ச்சனை நேரம் இரவு 7.45 மணிக்குத்தான் தொடங்கும் என்று அவரிடம் தெரிவிக்கப்பட்டது. இரவு 7.36 மணிக்கு திருமதி விக்னே ஸ்வரியின் தந்தை கோயிலுக்குள் நுழைந் தார் என்றும் உபய வழிபாடு நடந்துகொண்டிருந்ததால்
இருக்கையில் அமர அவருக்கு வசதி செய்யப்பட்டு அதனை அவர் ஏற்றுக்கொண்டதாகவும் அறிக்கையில் கூறப்பட்டது.

அர்ச்சனையை முடித்துவிட்டு அவர் இரவு 8.38 மணிக்கு கோயிலிலிருந்து புறப்பட்டார்.

“சம்பவத்தை நாங்கள் தீர விசாரித்த பின், எங்களிடமிருந்து நேரடியாக அதிகாரத்துவ விளக்கம் பெறாமல் திருமதி விக்னேஸ்வரி இது குறித்து ஃபே ஸ்புக் பக்கத்தில் பதிவு வெ ளியிட்டது சங்கடத்தை தருகிறது,” என்று கோயில் நிர்வாகம் அறிக்கை யில் குறிப்பிட் டது.

கோயில் நிர்வாகத்தை ச் சந் திக்க வருமாறு விடுத்த அழைப்பை திருமதி விக்னேஸ்வரி ஏற்றுக்கொண்டு இன்று அக்கோயிலுக்கு சென்றதாக தமிழ் முரசு செய்திக் குழு அறிகிறது. இதன் தொ டர்பில் கருத்து கேட்க திருமதி விக்னே ஸ்வரியிடம் தொ டர்புகொள்ளும் முயற்சி, நேற்றிரவு தமிழ் முரசு அச்சாகும் வரை பலன் அளிக்கவில்லை .

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!