கொரோனா நெருக்கடியிலும் குறைவில்லா கொண்டாட்டம்

இவ்வாண்டு பிப்ரவரி மாதம் திருமணம் செய்த 33 வயது திருமதி கொங் சி யூவன் ஒரு சீன முஸ்லிம். இவ்வாண்டு அவருக்குத் தலை ஹஜ்ஜுப் பெருநாள் கொண்டாட்டம். அவர் முதல் முறையாக பெருநாளைக் கொண்டாடுகிறார். “பெருநாள் கொண்டாட்டம் குறித்து பெரிய எதிர்பார்ப்புகள் எதுவும் எனக்கு இருந்ததில்லை. எளிதான முறையில் கொண்டாடினாலும் இப்போது குடும்பத்தின் அரவணைப்போடு கொண்டாடுவதே எனக்கு மகிழ்ச்சி தருகிறது,” என்றார் சி யூவன். இஸ்லாம் சமயத்தின் அம்சங் களான மரியாதை, கட்டுப்பாடு, வலுவான குடும்பப் பிணைப்பு போன்றவற்றை விரும்புவதாகக் குறிப்பிட்ட சி யூவன், தமது புது குடும்பத்தின் உறவுகள் தனக்கு மகிழ்வூட்டுவதாக சொன்னார்.

“என் மாமியார் பெரும்பாலும் தமிழில் பேசுவதால் மொழி வேறு பாடு உண்டு. தொடர்புகொள்வது ஒரு சவாலாக இருந்தாலும் அவரால் முடிந்த வழிகளில் என்னிடம் உரையாடுவார். கலாசார வேறுபாடுகள் இருந் தாலும் எனக்குப் பிடித்த, பிடிக் காதவற்றைப் பற்றி அவர் நன்கு தெரிந்துவைத்துள்ளார். “முடிந்த அளவில் அனைவரின் தேவைகளையும் பூர்த்தி செய்வார். இந்த வலுவான குடும்பப் பிணைப்பு எனக்குப் பிடித்துள்ளது,” என்று சி யூவன் தெரிவித்தார். திருமதி நஸ்ஹத் ஃபஹிமா வின், 35, இரண்டு சகோதரர்களும் அவர்களின் தலைப் பெருநாளை இவ்வாண்டு கொண்டாடுகின்றனர்.

நஸ்ஹத்தின் தம்பி 34 வயது முஹம்மத் நக்தீரும் சி யூவனும் காதல் திருமணம் செய்துகொண்ட னர். நஸ்ஹத்தின் தங்கையான 28 வயது திருமதி நபிலா பானுவும் 28 வயது பரக்கத் அலியும் கடந்த ஆண்டு டிசம்பரில் மணமுடித்தனர். “என் கணவரின் குடும்பத்தினர் இந்தியாவில் உள்ளனர். இவ்வாண்டு என் மைத்துனரின் குடும்பத்துடனும் என் கணவரின் குடும்பத்துடனும் சேர்ந்து கொண்டாடும் எண்ணத்தில் இருந்தோம். “ஆனால் கொவிட்-19 காரணத்தால் அது இயலவில்லை. இந்தியாவிலிருந்து வந்த என் கண வருடன் என் மொத்த குடும்பமும் நண்பர்களும் பழகுவதற்கு இந்தப் பெருநாள் ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்துள்ளது,” என்றார் நபிலா. ஹஜ்ஜுப் பெருநாளான இன்று நஸ்ஹத்தின் குடும்பத்தாரும் அவரின் சகோதர தம்பதிகளும் சேர்ந்து மதியம் பிரியாணி உண்டனர். “வழக்கமான காலத்தில் பெருநாள் காலையில் அருகே உள்ள பள்ளிவாசலுக்குச் செல்வோம். பள்ளிவாசலுக்குச் செல்லும்போது தமிழர்கள் மட்டுமல்லாமல் மலாய்,