சுடச் சுடச் செய்திகள்

ஸ்ரீ மாரியம்மன் கோயிலில் காணாமல்போன நகைகள் மீட்கப்பட்டன

சவுத் பிரிட்ஜ் ரோடு ஸ்ரீ மாரியம்மன் கோயிலில் அம்மனுக்கு அணிவிக்கப்படும் தங்க நகைகளில் சில காணாமல்போய், பின்னர் மீட்கப்பட்டதன் தொடர்பில் போலிசில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாக ஆலயத்தின் செய்தி அறிக்கை தெரிவிக்கிறது.

ஆலயத்தில் அம்மனுக்கு அடிக்கடி அணிவிக்கப்படும் தங்க நகைகள், தலைமை அர்ச்சகரின் கட்டுப்பாட்டில், ஆலய சன்னதியின் உட்பகுதியில் வைக்கப்பட்டிருப்பது வழக்கம்.

அந்த நகைகள் அடிக்கடி தணிக்கைக்கு உட்படுத்தப்படும். கடந்த முறை அவ்வாறு தணிக்கை செய்யும்போது, சில தங்க நகைகள் காணாமல் போனது கண்டுபிடிக்கப்பட்டது.

இதன் தொடர்பில் தலைமை அர்ச்சகரிடம் விசாரணை செய்ததையடுத்து, காணாமல் போன அனைத்து நகைகளும் மீட்கப்பட்டன.

அதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட கூடுதல் சோதனையில் அனைத்து நகைகளும் இருப்பதை ஆலய நிர்வாகக் குழு உறுதிப்படுத்தியது. இந்தச் சம்பவத்தில் வேறு யாருக்கும் தொடர்பில்லை என்பதையும் ஆலய நிர்வாகம் தெரிவித்தது.

ஆலயத்துக்கு இழப்பு எதுவும் இல்லாதுபோனாலும், அங்கு ஒரு குற்றம் நடந்திருப்பதால், அது குறித்து போலிசில் புகார் அளிக்கப்பட்டது.

சம்பவத்தின் தொடர்பில் போலிசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்; ஆலயத்தின் தலைமை அர்ச்சகர் தற்போது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

காணாமல்போன நகைகள் கண்டுபிடிக்கப்பட்டதிலிருந்தே, இந்தச் சம்பவம் பற்றி இந்து அறக்கட்டளை வாரியத்துக்குத் தெரிவிக்கப்பட்டது. ஆலயமும் வாரியமும் இணைந்து இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் நடவடிக்கைகளில் அணுக்கமாகச் செயல்படுகின்றன.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon