ஓடுபாதை நீளம் போதாது - ஒன்பது ஆண்டுகளுக்கு முன்னரே எச்சரிக்கை

கேரளாவின் கோழிக்கோடு கரிப்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் வெள் ளிக்கிழமையன்று ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் விபத்துக்குள்ளானதை அடுத்து விமான நிலையத்தின் ஓடுபாதை, பாது காப்பான அளவுக்கு நீளமுடையதா என்பது குறித்துக் கேள்விகள் எழுந்துள்ளன. இரண்டு விமானிகள் உட்பட குறைந்தது 19 பேர் பலியாகியுள்ள நிலையில், மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சு, இந்த விபத்து தொடர்பில் உடனடியாக பாதுகாப்பு ஆலோசனைக் குழு ஒன்றை அமைத்தது. அதில் இடம்பெற்றிருக்கும் மோகன் ரங்கநாதன் என்ற விமானி, கோழிக்கோடு விமான நிலைய ஓடுபாதை நீளம் போதாது என்று ஒன்பது ஆண்டுகளுக்கு முன்னரே தாம் எச்சரித்ததாகவும் அதை யாரும் கண்டுகொள்ளவில்லை என்றும் கூறினார்.

விபத்துக்குள்ளான விமானம் தரை இறங்கும் முன்னதாக கோழிக்கோடு விமான நிலையத்தில் இரு முறை தரை யிறங்க முயன்றுள்ளது என்று FlightRadar24 என்ற விமானத் தகவல் கண்காணிப்பு இணையத்தளம் தெரிவித்துள்ளது. இந் நிலையில் விழுந்து இரண்டாக உடைந்த விமானத்தின் கறுப்புப் பெட்டி மீட்கப்பட் டுள்ளது. கொவிட்-19 காரணமாக வெளி நாடுகளில் சிக்கி இருக்கும் இந்தியர்க ளைத் தாயகம் கொண்டுவரும் திட்டத்தை ஒட்டி ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் போயிங் விமானம், 10 கைக்குழந்தைகள் உட்பட மொத்தம் 191 பேருடன் துபாயிலிருந்து கேரளாவுக்குப் புறப்பட்டது.

கோழிக்கோடு கரிப்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் இரவு 7.40 மணிக் குத் தரை இறங்கியபோது கடும் மழை காரணமாக ஓடுபாதையைத் தாண்டி ஓடிய விமானம் ஒரு சரிவில் விழுந்து இரண் டாக உடைந்தது. குன்றின் மேல் அமைந்திருக்கும் இந்த விமான நிலையத்தில் 2,860 மீட்டர் நீள முடைய ஓடுபாதை உள்ளது. அந்த ஓடு பாதை செங்குத்தான பகுதியில் முடிவ டையும். இதற்கு முன் 2010ஆம் ஆண்டில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம், மங்க ளூரு ஓடுபாதையைத் தாண்டி விபத்துக் குள்ளானதில் 158 பேர் உயிரிழந்தனர். கேரளாவில் தொடர்ந்து பெய்து வரும் கடும் மழையால் விமானம் சறுக்கியிருக் கக்கூடும் என்ற

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!