களைகட்டவுள்ள பொங்கல் கொண்டாட்டம்

லிட்டில் இந்தியாவில் ஆண்டுதோறும் பிரம்மாண்டமாகக் கொண்டாடப்படும் பொங்கல் திருநாள் இம்முறை சுவாரசியமான பல அம்சங்களுடன் இடம்பெறவுள்ளது. வரும் 9ஆம் தேதி ஒளியூட்டு விழாவுடன் தொடங்கும் பொங்கல் கொண்டாட்டங்கள் இம்மாத இறுதி வரை நீடிக்கும்.
கிளைவ் ஸ்திரீட்டில் ‘போலி அட் கிளைவ்’ எனும் இடத்தில் நடைபெறவிருக்கும் ஒளியூட்டு நிகழ்ச்சியில் துணை அமைச்சர் திரு எல்வின் டான் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்கவுள்ளார்.

கொவிட்-19 நோய்ப் பரவல் கட்டுப்பாடுகள் காரணமாக ஐம்பது பேர் மட்டுமே நேரில் பங்கேற்க முடியும் என்பதால் பொங்கல் ஒளியூட்டு விழாவைப் பொதுமக்கள் லிட்டில் இந்தியா வர்த்தகர்கள், மரபுடைமைச் சங்கத்தின் (லிஷா) ஃபேஸ்புக் பக்கத்தில் நேரலையாகக் கண்டு மகிழலாம்.

பிரபல சிங்கப்பூர் தமிழ்ப் பாடகர்களின் பாடல்கள், மணிமாறன் நடனக் குழுவினரின் கிராமிய நடனங்கள் என வண்ணமயமாகத் தொடங்கவிருக்கிறது பொங்கல் கொண்டாட்டங்கள். ஒளியூட்டுத் தோரணங்களும் வளைவுகளும் அடுத்த மாதம் 12ஆம் தேதி வரை இடம்பெற்றிருக்கும். கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகளால் கொண்டாட்டங்களின் பிரம்மாண்டமும் அவற்றில் கலந்துகொள்வோர் எண்ணிக்கையும் குறைவாக இருப்பினும் பொங்கல் திருநாள் உணர்வும் உற்சாகமும் எள்ளளவும் குறையாது என்று சொன்னார் ‘லிஷா’ தலைவர் சி.சங்கரநாதன்.

மக்கள் ஆர்வத்துடன் எதிர்பார்க்கும் ஓர் அம்சமான மாட்டுத் தொழுவத்தை அமைக்கவும் மாட்டுப் பொங்கல் கொண்டாட்டங்களுக்கும் இம்முறையும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதற்கான அனுமதி இன்னும் கிடைக்கவில்லை என்றபோதும் விரைவில் அது கிடைத்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ்ப் பண்பாடு குறித்து அறிந்துகொள்வதற்காக, கடந்த சில ஆண்டுகளாக பொங்கல் கொண்டாட்டங்களில் கலந்துகொள்ளும்படி இளம் தலைமுறையினர் ஊக்குவிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில், வரும் 11ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை ‘பொங்கல் அனுபவம்’ எனும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
அந்நிகழ்ச்சியில் பொங்கல் வைத்தல், தோரணம் கட்டுதல், உறியடித்தல், கிராமிய நடனங்கள், மட்பாண்டம் செய்தல் ஆகியவை குறித்து மாணவர்கள் கற்றுக்கொள்ளலாம்.
பொங்கல் திருநாளன்றும் மறுநாள் மாட்டுப் பொங்கலன்றும் 500 பேருக்குப் பொங்கல் பொட்டலங்கள் வழங்கப்படும்.

இவ்வாண்டு பொங்கல் திருநாளை ஒட்டி, இந்திய மரபுடைமை நிலையமும் பல நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்துள்ளது.
‘பொங்கல் டே அவுட்’ எனும் கருப்பொருளுடன் இவ்வாண்டு சிறார்களுக்காக ‘பொங்கலோ பொங்கல்’ எனும் கற்றல் இணையப்பக்கத்தை மரபுடைமை நிலையம் அறிமுகப்படுத்தவுள்ளது.

பொங்கல் திருநாளின் பாரம்பரியம் குறித்தும் சிங்கப்பூரில் அத்திருநாள் எவ்வாறு கொண்டாடப்பட்டு வருகிறது என்பது குறித்தும் அவர்கள் https://www.indianheritage.gov.sg/en இணையப் பக்கத்தில் தகவல்களை அறிந்துகொள்ளலாம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!